Monday, November 12, 2012

சாக்ஷி



தினசரி தியானம்



சாக்ஷி

பிரபஞ்சத்தின் நடைமுறை அனைத்துக்கும் பரம்பொருளே, நீ சாக்ஷியாயிருப்பது போன்று எனது உடல் வாழ்க்கைக்கு நான் வெறும் சாக்ஷியாயிருப்பேனாக.


அழகிய படம் ஒன்றை ஒருவன் விலைக்கு விற்கிறான். மற்றொருவன் வாங்குதற்குப் பேரம் பண்ணுகிறான். இருவர் கருத்தும் விலையிலேயே சென்றுகொண்டிருக்கிறது. வழிப்போக்கன் ஒருவனோ படத்தின் ஓவியத் திறமையை ரசித்துக்கொண்டிருக்கிறான். பிரபஞ்சம் என்னும் படத்தை அதற்கு சாக்ஷியாயிருப்பவனே ரசிக்கிறான். அதில் கட்டுண்டிருப்பவன் ரசிப்பதில்லை.


சொல்லால் மனத்தால் தொடராச் சம்பூரணத்தில்
நில்லா நிலையாய் நிலைநிற்ப தெந்நாளோ?
-தாயுமானவர்