Saturday, October 13, 2012



நவராத்திரி நான் தரும் டிப்ஸ்


கீழே கொடுக்கப்பட்டுள்ளவை யாவும் நீங்கள்
அனைவரும் அறிந்ததே , ஒரு நினைவு கூறுதலாக
இதை உங்களுக்கு அளிக்கின்றேன்


நவராத்திரி அன்று வீட்டிற்கு வருபவர்களுக்கு
சந்தனம் கொடுத்து வரவேற்க்கவேண்டும் .

அவர்கள் தரையில் அமர்வதற்கு வசதியாக தரை விரிப்பு
நல்ல கண்ணைக் கவரும் வண்ணத்தில் இருத்தல் நலம்

பாடத் தெரிந்தவர்களை கண்டிப்பாக ஒரு பாடலாவது
படும்படி அன்புடன் பணிக்கவேண்டும்

அவர்கள் பாடும் சமயத்தில் அனைவரும் அமைதி
காத்து அவர்கள் பாடுவதை ரசிக்க வேண்டும்

அவர்கள் அருந்துவதர்க்கோ /தின்பதர்க்கோ ஏதாவது
கொடுத்து உபசரிக்க வேண்டும்.

விடைபெற்று செல்லும் சமயம் அவர்களுக்கு குங்குமம்
வெற்றிலை பாக்கு மற்றும் சுண்டல் கொடுத்து வழியனுப்ப வேண்டும்

பெரியவர்களுடன் குழந்தைகள் வந்திருந்தால் பெண்
குழந்தைகளுக்கும் (அவர்களுக்குதான் முதலில்)
வெற்றிலை பாக்கு கொடுக்கவேண்டும் , ஆண்
குழந்தைகளுக்கு , பழம், சாக்லேட் ,சுண்டல் போன்றவை
கொடுக்கலாம்.

வயதில் பெரியவர்கள் வந்தால் அவர்களுக்கு
தாம்பூல மரியாதை செய்து அவர்களை நமஸ்கரித்து
ஆசி பெற்றுக்கொள்ளுதல் நலம்.


நவராத்திரிக்கு நண்பர்கள், உறவினர்கள் என்று
வகைப்படுத்தி குறிப்பிட்ட தேதிகள் நிர்ணயம் செய்து
அழைத்தால் வந்தவர்களை கவனித்து உபசரிக்க
ஏதுவாக இருக்கும்.

No comments:

Post a Comment