Thursday, October 18, 2012

துலாம் மாதம்

துலாம் மாதம்: ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தங்கக்குடத்தில் திருமஞ்சனம்




ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு ஐப்பசி மாதப்பிறப்பையொட்டி, காவிரியிலிருந்து யானை மீது தங்கக்குடத்தில் திருமஞ்சனம் எடுத்துச் செல்லப்பட்டது.ஸ்ரீரங்கம் ரங்கநாதருக்கு தினமும் கொள்ளிடம் ஆற்றிலிருந்து வெள்ளிக்குடத்தில் திருமஞ்சனம் கொண்டு வருவது வழக்கம். துலாம் மாதம் எனப்படும் ஐப்பசி மாதத்தில், மாதம் முழுவதும், தினமும் தங்கக் குடத்தில், அம்மாமண்டபம் காவிரி படித்துறையிலிருந்து திருமஞ்சனம் கொண்டு செல்லப்படும்.அதன்படி, ஐப்பசி ஒன்றாம் தேதியான நேற்று, இந்த வைபவம் துவங்கியது. காலை, 5.45 மணிக்கு கோவில் யானை ஆண்டாள் மீது தங்கக்குடத்தில் திருமஞ்சனம் எடுத்து செல்லப்பட்டது. தங்ககுட திருமஞ்சனம் ரங்கா, ரங்கா கோபுரம் வழியாக கோவில் மூலஸ்தானத்தை அடைந்தது. துலாம் மாதமான ஐப்பசி முழுவதும் ரங்கநாதருக்கு தங்கத்தால் ஆன பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது.துலாம் மாதம் பிறப்பையொட்டி, நேற்று நம்பெருமாள் புறப்பாடு நடந்தது. இதையொட்டி காலை, 10 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். 10.15 மணிக்கு சந்தனு மண்டபத்தை அடைந்தார். 11 மணியிலிருந்து மதியம், 1 மணி வரை, திருமஞ்சனம் நடந்தது. 2.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தை அடைந்தார்.

No comments:

Post a Comment