சுவாதி நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடியோ அல்லது சுவாதி நட்சத்திரத்தின்றோ சென்று விசேஷ வழிபாடு செய்ய வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லி அருகில் சித்துக்காடு தாத்திரீஸ்வரர் மற்றும் சுந்தராஜப்பெருமாள் திருக்கோயிலாகும்.
மூலவர் : தாத்திரீஸ்வரர்
தாயார் : பூங்குழலி
தொன்மை 2000 ஆண்டுகள்
ஊர் சித்துக்காடு
மாவட்டம் சென்னை
மாநிலம் தமிழ்நாடு
திருவிழா
சித்ரா பவுர்ணமியில் பஞ்ச மூர்த்தி புறப்பாடு,
விநாயகர் சதுர்த்தி
சிவராத்திரி
மார்கழி திருவாதிரை
திருக்கார்த்திகை
ஆடி, தை கிருத்திகை
தை பூசம்
பங்குனி உத்திரம்
கோயில் சிறப்பு: சிவன் சன்னதி எதிரே உள்ள நந்தி சாந்தமாக காணப்படுவதால் மூக்கணாங்கயிறு இல்லை
வழிபாட்டு நேரம் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரை
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை
முகவரி அருள்மிகு தாந்திரீஸ்வரர்(சித்துக்காடு)திருக்கோவில்,
தெற்கு மாட்ட வீதி, திருமணம் கிராமம்
பட்டாபிராம் வழி, வயலாநல்லூர் போஸ்ட்
சென்னை 600 072
தகவல் தொடரபு +91 93643 48700 / 93826 84485
பொதுவான தகவல்:- சுவாதி நட்சத்திரகார்கள் எதிலும் முன்யோசனையோடு
செயல்படுபவர்கள். சுகபோகங்களை அனுபவிக்கும் யோகம்
கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமாக நடந்து கொள்ளும்
இவர்கள் பழகவுவதர்க்கு மிகவும் இனிமையானவர்கள்.
ஆழ்ந்த உறக்கத்தில் கனவு காணும் பழக்கம் உள்ளவர்கள்
கோவிலின் பிரகாரத்தில் ஆதிசங்கரர், மகாலட்சுமி , சரஸ்வதி
சந்நிதிகள் உள்ளன.
பிரார்த்தனை:- திருமணத்தடை அகல பிரார்த்திப்பார்கள் , இதய நோய் உள்ளவர்கள் பிரார்த்தனை செய்துகொள்வார்கள். சுவாதி நட்சத்திரகாரர்கள்
தங்கள் தோஷ நிவர்த்திக்காக இத்தல இறைவனை பிரார்த்திப்பார்கள்
நேர்த்திக்கடன்: சுவாமிக்கு நெல்லிச்சாறு, நெல்லிப்பொடி மற்றும் பால் அபிஷேகம் செய்வித்தும், பூங்குழலி அம்பாளுக்கு பச்சை வஸ்திரம், வளையல் அணிவித்தும், நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.

ஆயுள்பலம் தரும் சித்தர்: கோயிலிலுள்ள தூண்களில் சில சித்தர்களின் சிற்பங்கள் உள்ளன. சிவன் சன்னதி எதிரேயுள்ள நந்தி, சாந்தமாக காட்சியளிக்கிறது. எனவே மூக்கணாங்கயிறு இல்லை. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தர், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தர் சிற்பங்கள் உள்ளன. தன்னை வழிபடும் பக்தர்களுக்கு பிராணனை (உயிர்) காப்பவராக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது. ஆயுள் விருத்திக்காக, இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள். இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவருக்கு, நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.
நட்சத்திர தீபம்: சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கான பரிகார தலம் இது. திருக்கார்த்திகை, ஆடி, தை கிருத்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் சுப்பிரமணியருக்கு விசேஷ அபிஷேகம் நடக்கும். திருக்கார்த்திகையன்று சிவன் சன்னதியில் 27 நட்சத்திரங்களுக்கும் தீபம் ஏற்றி பூஜை செய்கின்றனர். மார்கழியில் நடராஜருக்கு 10 நாள் விழா நடக்கும். திருவாதிரையன்று, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. இந்த திருமணத்தைக் கண்டவர்களுக்கு நல்ல மண வாழ்க்கை அமையும் என்பதும், தம்பதியர் கருத்தொற்றுமையுடன் வாழ்வர் என்பதும் நம்பிக்கை.
சிறப்பம்சம்: சுவாதி எனும் புனித சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்கிய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன. நமசிவாய மந்திரத்தில் வகாரத்தில், சுவாதி என்ற புனிதச் சொல்லும் அடங்கும். அதேபோல் பெருமாளின் அம்சமான சுந்தரராஜர், வாசுதேவர், திரிவிக்ரமன் ஆகிய மூவருக்கும் உரிய பீஜாட்சர சக்திகள் நிறைந்தது சுவாதி என்ற சொல். எனவேதான் சுவாதி நட்சத்திர நாளில் சிவன், விஷ்ணு இருவரும் இணைந்து அருளும் சித்துக்காடு தலத்திற்கு சென்று வழிபடுவது சிறப்பு. சுவாதியில் பிறந்தவர்கள் அந்த நட்சத்திர நாளில் இத்தல குபேரனுக்கு, நெல்லிக்காய்றுகாயுடன், தயிர்சாதம், புளியோதரை படைத்து அதை ஏழைமக்களுக்கு தானம் செய்தால், செல்வம் பெருகி, வாழ்வு சிறக்கும் என்பது ஐதீகம்.
A good information Vasan anna... BTW im SWATI... and the information is very useful... valarga ungal sevai...
ReplyDeleteVasan
ReplyDeleteSuper
ReplyDelete