சிங்கமுக அம்பிகை
பெருமாளை நரசிம்மராக சிங்க வடிவத்தில் பல கோயில்களில்
காண்கிறோம். பெரும்பாலான அம்மன் கோயில்களில், சிங்கம்
அம்பாளின் வாகனமாக மூலஸ்தானத்தின் முன்னே இருக்கிறது.
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் வாசலில், பிரம்மாண்டமான
சிங்க வாகனத்தைக் காணலாம். ஆனால், அம்பாளையே சிங்க முகத்துடன் காண வேண்டுமானால், கும்பகோணம் அருகிலுள்ள அய்யாவாடி பிரத்தியங்கிரா கோயிலுக்குச் செல்லவேண்டும். சக்தி வாய்ந்த இந்த அம்பிகைக்கு நொடியே இல்லாமல் மிளக்காய் வத்தல் அர்ச்சனை செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment