Monday, October 8, 2012

திருக்குடைகள்

திருக்குடைகள் சமர்ப்பித்தல் விழா




புரட்டாசி சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ அம்ருதபுரி ஸ்ரீ ராமானுஜ யோகவனத்தில் நடைபெற்ற திருக்குடைகள் சமர்ப்பிக்கும் விழாவில் வெள்ளிக் கவசத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ராமர், சீதா, லட்சுமணன், ஹனுமன்.

செங்கல்பட்டு அடுத்த வேடந்தாங்கல் செல்லும் வழியில் மலைவையாவூர் அருகில் அம்ருதபுரியில் எழுந்தருளி உள்ள ஸ்ரீ மரகதவல்லி நாயகி ஸமேத ஸ்ரீ ஸ்ரீநிவாஸப் பெருமாள் கோயிலில் புரட்டாசி 3-வது சனிக்கிழமையையொட்டி ஸ்ரீ ராமானுஜ யோகவனத்தில் திருக்குடைகள் சமர்ப்பித்தல் விழா நடைபெற்றது.

இதையொட்டி சென்னை நங்கம்பாக்கம் ஸ்ரீ ஸ்ரீநிவாஸ நிகேதனத்தில் இருந்து அக்டோபர் 2-ம் தேதி ஸ்ரீ தாரா நாயகா ஸமேத பகவான் ஸ்ரீமத் ஸீதாராம ஸ்வாமிகள் 700-க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் சென்னையில் இருந்து பாதயாத்திரை புறப்பாடு நடைபெற்றது.

÷தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோயில், செங்கல்பட்டு படாளம் வழியாக ராமர், சீதை, லட்சுமணன், ஹனுமன் வெள்ளி கவச அலங்காரத்துடனும்,

÷இதேபோல் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத ஸ்ரீநிவாஸப் பெருமாள் தங்க கவச அலங்காரம், திருக்குடையுடன் சென்னையில் இருந்து புறப்பாடாகி சனிக்கிழமை வேடந்தாங்கல் செல்லும் வழியில் ஸ்ரீ அம்ருதபுரியில் உள்ள ஸ்ரீ ராமனுஜ யோகவனத்தை அடைத்தது.

÷அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜ யோகவனத்தில் திருக்குடைகள் சமர்ப்பிக்கும் விழாவும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீமத் ஸீதாராமஸ்வாமிகள் மற்றும் கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments:

Post a Comment