Monday, October 8, 2012

நாலடியார் - (383/400)

நாலடியார்   - (383/400)

நாலாறும் ஆறாய் , நனிசிறிதாய், எப்புறனும்
மேலாறு, மேலுறை சோரினும்  --- மேலாய
வல்லாளாய் வாழும்ஊர் தற்புகழும் மான்கற்பின்
இல்லாள் அமர்ந்ததே இல்.

பொருள்:- நான்கு பக்கங்களிலும் இடிந்து, வழி உடையதாக
மிகவும் சிறியதாக, எல்லாப் பக்கங்களிலும் மேல் மேல்
கூரையிலிருந்து மழை நீர் ஒழுகும் வறிய நிலை வந்தபோதும்
தன் கடமைகளைச் செவ்வனே செய்ய வல்லவளாய், தான்
வாழும் ஊரில் உள்ளவர்கள் தன்னைப் புகழும் படியான
மாட்சியைப் பட்ட கற்பினை உடைய மனைவி வாழ்கின்ற
வீடே சிறந்த வீடு ஆகும்.

No comments:

Post a Comment