Saturday, October 13, 2012

விவேகம்


தினசரி தியானம்

விவேகம்

     சித்தமிசை குடிகொண்டுள்ள அறிவான தெய்வமே, விவேகம் என்னும் விளக்கேற்றி வைத்டு உன்னைத் தரிசிப்பேனாக.

     நித்தியமாய், மனிதனுக்கு நலன் தருவதாய் இருப்பது எது என்று பாகுபடுத்த வேண்டும். உடலையும் உள்ளத்தையும் பற்றிய யாவும் ஓயாது மாறிக் கொண்டிருக்கின்றன. ஆகையால் அவை நித்தியமானவைகள் அல்ல. அறிவையும் ஆனந்தத்தையும் பற்றியவையே நித்தியமானவை. இதை அறிந்து கொள்ளுதல் விவேகம்.

எப்பொருளும் நீயெனவே
     எண்ணிநான் தோன்றாத
வைப்பைஅழி யாநிலையா
     வையாய் பராபரமே.
-தாயுமானவர்

No comments:

Post a Comment