Monday, October 22, 2012

முமுக்ஷுத்வம்



தினசரி தியானம்



முமுக்ஷுத்வம்



சச்சிதானந்த சிவமே, உன்னை நான் அடைந்தாக வேண்டுமென்று முழு மனதோடு முயன்றால் நொடிப்பொழுதில் உன்னில் நான் ஒன்றித்து விடுவேன்.


தண்ணீருக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்டிருப்பவனுக்கு வேறு எந்த விதமான நாட்டமும் உண்டாவதில்லை. சுவாசிப்பதற்குக் கொஞ்சம் காற்று கிடைத்தால் போதுமென்று அதன் பொருட்டே அவன் திணறுவான். உயிரைக் காப்பாற்றத் திண்டாடுவது போன்று தெய்வத்தை அடையத் திண்டாடுவது முமுக்ஷுத்வம்.


தித்திக்குந் தெள்ளமிர்தை சித்தாந்தத் துட்பொருளை
முத்திக்கு வித்தை முதனினைப்ப தெக்காலம்.
-பத்திரகிரியார்

No comments:

Post a Comment