Monday, October 15, 2012

வைராக்கியம்



தினசரி தியானம்


வைராக்கியம்


பொய்யாகிய பிரபஞ்ச வாழ்க்கையில் வைராக்கியம் வைக்காது மெய்யாகிய பரமனே, உன்னை நான் அடைவது எங்ஙனம்?


விடாப்பிடி கொள்வதைச் சிலர் வைராக்கியம் என்று எண்ணுகின்றனர். உண்மை அதுவன்று. ராகம் என்றால் பற்றுதல்; விராகம் அல்லது வைராக்கியம் என்றால் பற்றற்ற நிலை. உலக விஷயங்களில் வைராக்கியம் வந்தால் பகவத் விஷயங்களில் இயல்பாக நாட்டம் உண்டாகும். வைராக்கியம் இல்லாதவனுக்கு ஆத்மசாதனம் இல்லை.


சுரப்பற்று வல்வினை சுற்றமு
மற்றுத் தொழில்களற்றுக்
கரப்பற்று மங்கையர் கையிணக்
கற்றுக் கவலையற்று
வரப்பற்று நாதனை வாயார
வாழ்த்தி மனமடங்கப்
பரப்பற் றிருப்பதன் றோபர
மாபர மானந்தமே.
-பட்டினத்தார்

No comments:

Post a Comment