Tuesday, October 30, 2012

கோதுமை மாவு பிஸ்கட்

கோதுமை மாவு பிஸ்கட் - இனிப்பு வகை

கோதுமை மாவு பிஸ்கட் தேவையான பொருட்கள்


பள்ளி நாட்களிலிருந்து இன்று வரை மறக்கமுடியாத
ஒரு நொறுக்குத்தீனி இந்த கோதுமை மாவு பிஸ்கட்


ஸ்கூல் போகும்போது பாகெட் நிறைய போட்டுண்டு
வழியெல்லாம் தின்னுண்டே போவேன் , ஸ்கூல்
நண்பர்களுக்கு கொடுத்து மகிழ்ந்த காலம் பசுமை நினைவுகள்
மாறாத காலம்.


அதிக சிரமம் இல்லாமல் சுலபமான செயமுறைகளுடன் கூடிய
சுவையான தின்பண்டம்.

கோதுமை மாவு - 1 கோப்பை
சர்க்கரை - 1/4 கோப்பை
நெய் - 2 மேஜைக் கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவை சலித்து நெய் சேர்த்து கையால் ஒரே சீராக நன்கு பிசறவும்.
சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து சூடாக்கி கரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கோதுமை மாவுடன் சர்க்கரைப் பாகை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு பிசையவும்.



 பிசைந்த மாவை 1/4 அங்குல கனத்திற்கு சப்பாத்தி போல உருட்டி, பின்னர் அதை டைமண்ட் வடிவிலோ அல்லது சிறு பாட்டில் மூடியைப் பயன்படுத்தி வட்ட வடிவிலோ வெட்டவும்.

பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொன் நிறமாக பொரித்தெடுக்கவும்.



இதுலயே சர்க்கரைக்கு பதிலாக , காரப்பொடி போட்டு செஞ்சா அது கார பிஸ்கட்

No comments:

Post a Comment