Tuesday, October 30, 2012

தீபாவளி மருந்து (பிள்ளை பெத்தா மருந்து)




தீபாவளி மருந்து (பிள்ளை பெத்தா மருந்து)

தீபாவளி ஒரு சிறந்த பண்டிகை, பலவகையான
தின்பண்டங்கள் நாம் ருசித்து மகிழ்வோம் , அதிகமாக
தின்பதால் சிலருக்கு அஜீரணம் ஏற்படலாம்.

ஆகவே தான் பலவகையான தின்பண்டங்களை
தயாரிக்க சொல்லி கொடுத்த நமக்கு , நம் முன்னோர்கள்
கூடவே மாற்றாக ஒரு மருந்தையும் செய்ய நமக்கு
சொல்லி கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த மருந்தை நம் முன்னோர்கள் வீட்டில் பெண்கள்
பிரசவித்த காலத்தில் தொடர்ந்து 3 மாதங்கள்
பிரசவித்த தாய்மார்களுக்கு தினமும் காலையில்
தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட சொல்லி
ஒரு நெல்லிக்காய் அளவு உருட்டி கொடுப்பார்கள்.
தாய்மார்க்கு அஜீரணம் போகும், தாய்ப்பால் சுரக்க
ஏதுவாகும் .

சரி இப்பொழுது இந்த மருந்தின் செய்முறை
தேவைகள், செய்வது எப்படி என்று
நாம் கவனிப்போம்



தேவையானவை:

கரும்புச்சாறு - 2 கப்
சுக்கு
சித்தரத்தை
ஓமம்
மிளகு
நெய்
வெல்லம் (அச்சு வெல்லம் சிறந்தது)
(மூலப்பொருட்களை கிளறி கிடைக்கும் அளவை
போல் மூன்று மடங்கு வெல்லம் சேர்க்கவும்)
நல்லெண்ணெய் - 100 gram

கரும்பு வாங்கி தோல் சீவி , இடித்து சாறு பிழிவது
மிகவும் சிறந்தது .

சுக்கு , சித்தரத்தை துண்டுகளாக வெட்டி வைக்கவும் .

அடுப்பில் அடி கனமான இலுப்பசட்டி வைத்து மிதமான
சூட்டில் அதில் கரும்பு சாறு விட்டு , சுக்கு சித்தரத்தை ,
ஓமம், மிளகு (பொடி செய்து போடவும்)
நன்றாக நீர் வற்றி குழம்பாக ஆகும் வரை அடி பிடிக்காமல்
கிளறவும்.

வெல்லம் பொடிசெய்து , இதனுடன் சேர்த்து , பிறகு
நல்லெண்ணெய் சேர்த்து நன்றாக கெட்டிப்பதம் வந்ததும்
2 தேக்கரண்டி நெய் சேர்க்கவும்




அடுப்பில் இருந்து இறக்கி சூடு ஆறியதும் ஒரு கண்ணாடி ஜாடியில்
கற்றுபுகவண்ணம் போட்டு வைக்கவும் .

அப்டியே வச்சு மறந்துடக்கூடாது , தினமும் நாமும் காலையில்
சிறுநெல்லிக்காய் அளவு சாப்பிட்டு வந்தால் , உடல் ஆரோக்கியம்
பெருகும் . செய்வோமா ?

செஞ்சுதான் பார்ப்போமே !!!!

No comments:

Post a Comment