Thursday, October 11, 2012

வாழைக்காய் (கறி) பொறியல்


வாழைக்காய் (கறி) பொறியல்

வாழையின் பயன்பாட்டில் , வாழைக்காயின் பங்கு
பொறியல் , சிப்ஸ், பொடி , போன்றவை .

இப்பொழுது நாம் வாழைக்காய் கறி  செய்வது எப்படி
என்று பார்க்கலாம்.

இதில் இரண்டு வகையான  பொறியல்  செய்யலாம்
ஓன்று  காரம் போட்ட வகை, மற்றொன்று  காரம் இல்லாமல்
மஞ்சள் பொடி போட்டு வதக்குவது .


காரம் போட்ட  பொறியலும் ,  காரப்பொடி போட்டு செய்வது
ஒருவகை , அதற்கு பதிலாக , பிரத்யேக பொடி தயார்
செய்து போடுவது மற்றொரு வகை , நாம் இப்பொழுது
ஒவ்வொரு வகையாக பார்க்கலாம்.

முதலில்: வாழைக்காய்  பொறியல்  சாதாரணமாக
காரப்பொடி போட்டு செய்யும் முறை





தேவை: வாழைக்காய் 1
காரப்பொடி                    2 டீஸ்பூன்
உப்பு                               தேவைக்கேற்ப

தாளிக்க:- கடுகு , உளுத்தம் பருப்பு ,

கருவேப்பிலை  கொஞ்சம்


வாழைக்காயை  தோல் சீவி , சிறிது சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்



அடி கனமான பாத்திரத்தில் , 2 டம்பளர் தண்ணீர் விட்டு , நறுக்கிய
வாழைக்காயை போட்டு , கொஞ்சம் உப்பு , மஞ்சள் பொடி போட்டு
வேகவைக்கவும் . (குழைய வேண்டாம் - கவனம் தேவை)


அடுப்பில் வாணலியில் எண்ணை  விட்டு,  கடுகு, உளுத்தம்பருப்பு
தாளித்து , வேக வைத்த வாழைக்காயை போட்டு , 2 டீஸ்பூன்
காரப்பொடி போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் கருவேப்பிலை
சேர்க்கவும் .  10 நிமிடம் வதக்கியவுடன் அடுப்பில் இருந்து இறக்கி
வைக்கவும்.  இறக்கி வைக்கும் முன் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணை
விட்டு ஒரு  பெரட்டு பெரட்டி எடுக்கவும்.





இதே பொறியலுக்கு  காரப்பொடிக்கு பதிலாக

4 மிளகாய் வத்தல்  1 டீஸ்பூன் கடலைப்பருப்பு , 1 டீஸ்பூன் தனியா
இவற்றை கொஞ்சம் எண்ணை  விட்டு வறுத்து , மிக்சியில் பொடி
செய்து போடுங்க   இதன் சுவையே அலாதி



வேக வைத்த வாழைக்காயுடன் கொஞ்சம் மஞ்சள் பொடி சேர்த்து
வாணலியில் கடுகு உளுத்தம் பருப்பு தாளித்து இதனுடன் வாழைக்காயை
சேர்த்து வதக்கி எடுங்கள்.  அடுப்பில் இருந்து இறக்கி வைத்து , கொஞ்சம்
தேங்காய் துருவல் சேர்த்து சுவையுங்கள் , இது ஒரு அலாதி சுவை




ஆகா நாம் இப்பொழுது வாழைக்காயில் 3 விதமான  பொறியல்
தெரிஞ்சிகிட்டோம் , அப்புறம் என்ன சமைத்து ஜமாயுங்க ,
சுவைத்து மகிழுங்கள்

1 comment:

  1. Super mama..i like the idea of Podi making tips....thanks mama

    ReplyDelete