Sunday, October 7, 2012

உனது விருப்பம்

தினசரி தியானம்

உனது விருப்பம்

அண்ணலுக்கே நான் ஆட்பட்டவன். அவருக்குத் தொண்டு புரிவதல்லாது வேறு எதையும் அறியேன்.

நல்ல வேலைக்காரன் ஒருவன் தன் தலைவனிடம் தன்னை ஒப்படைத்து விடுகிறான். சம்பளம் கேட்பதில்லை; எதைக் கொடுத்தாலும் திருப்தியோடு ஏற்றுக் கொள்கிறான்; கொடாவிட்டால் குறை கூறுவதில்லை. அத்தகைய வேலைக்காரன் விஷயத்தில் தலைவனது பொறுப்பு மிகப் பெரியது ஆகிறது. கடவுள் தலைவன்; நான் வேலைக்காரன்.

வேண்டத்தக்கது அறிவோய் நீ
வேண்ட முழுதும் தருவோய்நீ
வேண்டும் அயன்மாற்கு அரியோய் நீ
வேண்டி என்னைப் பணி கொண்டாய்
வேண்டி நீ யாது அருள் செய்தாயானும்
அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்
அதுவும் உன் தன் விருப்பமன்றே.
-மாணிக்கவாசகர்

No comments:

Post a Comment