Sunday, October 14, 2012

எவ்வளவு கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு

எவ்வளவு கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு



ராகவேந்திர சுவாமிகள் தன் குடும்பம் மற்றும் சீடர்களின் குடும்பங்களுடன் தல யாத்திரை செய்து கொண்டிருந்தார். ஒரு சீடரின் மனைவி நிறைமாத கர்ப்பவதியாக இருந்தாள்.செல்லும் வழியில் அவளுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தாகம் வாட்டியது. அவர்கள் சென்று கொண்டிருந்த இடமோ பாலைவனப்பகுதி. தண்ணீர் இல்லை. சுடுமணலில் படுத்து அவளால் எப்படி பிரசவிக்க முடியும்!ராகவேந்திரர் தன் தணடத்தால் ஒரு வட்டமிட்டார். மூலராமரை வணங்கி சில மந்திரங்களைச் சொன்னார். என்ன ஆச்சரியம்! தண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. அதை அந்தப் பெண்ணும் உடன் வந்தவர்களும் குடித்து தாகம் தணித்தனர். தண்ணீர் பெருகியதால், அந்த இடத்தில் கிடந்த மண்ணும் குளிர்ந்தது. ராகவேந்திரர் தன் கஷாயத்தை (ஆடை) கூடாரம் போல் கட்டி நிழலை ஏற்படுத்தினார். உடன் வந்த பெண்கள் பிரசவம் பார்க்க குழந்தை பிறந்தது. எவ்வளவு கஷ்டமான சூழலிலும், ராகவேந்திரரை வழிபாடு செய்யும் பக்தர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

No comments:

Post a Comment