Wednesday, October 24, 2012

பூதத்தாழ்வார் அவதார உற்சவத் தேரோட்டம்

பூதத்தாழ்வார் அவதார உற்சவத் திருநாளையொட்டி தேரோட்டம்



மாமல்லபுரத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீதலசயனப்பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார திருநாளையொட்டி நடைபெற்றும் 10 நாள் உற்சவத்தில் 9ம் நாள் தேரோட்டம் நடைபெற்றது.

கடந்த 15ம் தேதியன்றுபூதத்தாழ்வார் அவதார திருநாளையொட்டி 10 நாள் உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. விழாவையொட்டி தினமும் கோயிலில் சிற்பபு திருமஞ்சனம், அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. உற்ஸவ மூர்த்தியான பூத்தாழ்வார் அலங்காரத்துடன் திருத்தேரில் வீதிவுலாவும் பக்தர்களின் பஜனைக் குழுவினரின் பஜன் ஊர்வலமும் நடைபெற்றது.

விழாவையொட்டி தேரோட்டம் மாமல்லபுரம் ஸ்ரீ தலசயனப்பெருமாள் கோயிலின் நான்கு மாடவீதிகள் பேருந்து நிலையம் அர்சுணன் தபசு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது. விழாவில்  பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து வேண்டிக்கொண்டினர்.

 பூதத்தாழ்வார் திருத்தேர் உற்சவத்தில் கலந்துக் கொள்வதற்காக மாமல்லபுரம் சுற்றுலா பயணிகள், வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள், செங்கல்பட்டு, திருக்கழுகுன்றம், திருப்போரூர், வெளியூர்களில் இருந்து வந்த பஜனை கோஷ்டியினர் கோயிலில் தங்கி பஜனை நிகழ்ச்சிகளில் பங்குக் கொண்டனர்.

No comments:

Post a Comment