Saturday, October 6, 2012

நிலைத்த உறவு


தினசரி தியானம்

நிலைத்த உறவு

     போற்றுதற்கும் சார்ந்திருப்பதற்கும் நின்னையல்லால் வேறு நட்பு யாரையும் யான் அறிந்திலேன்.

 உற்றார் உறவினர் என்பார் எல்லாரும் அவரவர் வினையை முடிக்க இவ்வையகத்தில் வந்துளர். அப்படி வருவதும் போவதும் தனித்தனியே நிகழ்கின்றன. ஒருவருக்காக இன்னொருவர் தனது போக்குவரவை மாற்றுவதில்லை. ஆதலால் இவர்க நிலைத்த உறவினர் ஆகார். கடவுள் ஒருவரே நிலைத்த உறவு ஆகிறார்.

என்பெற்ற தாயாரும் என்னைப்
     பிணமென்று இகழ்ந்துவிட்டார்
பொன்பெற்ற மாதரும் போவென்று
     சொல்லிப் புலம்பிவிட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம்
     வந்து குடமுடைத்தார்
உன்பற் றொழிய வொருபற்றும்
     இல்லை உடையவனே.

பட்டினத்தார்

No comments:

Post a Comment