Thursday, October 25, 2012

நாலடியார் - (400/400)

நாலடியார் - (400/400)


நானூறு நாட்கள் தொடர்ந்து நாலடியாரை
நான் கற்று , உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்
தோழமையுடன் தொடர்ந்து வந்தமைக்கு
நன்றி , நன்றி , நன்றி




கண்மூன்று உடையானும், காக்கையும், பையரவும்,
என்னீன்ற யாயும் பிழைத்ததென் ? -- பொன்னீன்ற
கோங்கரும்பு அன்ன முலையாய், பொருள்வயின்
பாங்கனார் சென்ற நெறி!


பொருள்:- பொன் போன்ற தேமல்கள் பொருந்திய
கோங்கினது அரும்புகளைப் போன்று விளங்கும்
கொங்கைகளை உடைய தோழியே! மூன்று கண்களை
உடைய சிவனும், காக்கையும் (சனீஸ்வரனும்),
படமுடைய ராகு என்ற பாம்பும், என்னைப் பெற்ற
தாயும் எனக்குச் செய்த குட்ட்ரம்தான் என்ன?
ஒன்றும் இல்லை. குற்றமெல்லாம், என் தலைவர்,
பொருள் மீது உண்டான ஆசையினால் என்னைப்
பிரிந்து சென்ற நெறியே ஆகும். (என்று தலைவி
தனது தலைவனைப் பிரிந்த ஆற்றாமையை
தோழிக்குச் சொன்னது).


(நிறைவடைந்தது)

No comments:

Post a Comment