Thursday, October 25, 2012

நாலடியார் - (399/400)

நாலடியார் - (399/400)




முலைக்கண்ணும், முத்தும், முழுமெய்யும், புல்லும்
இலக்கணம் யாதும் அறியேன்; -- கலைக்கணம்
வேங்கை வெருஉம் நெறிசெலிய போலும், என்
பூம்பாவை செய்த குறி.


பொருள்:- (மகள் தன்னைப் பிரிந்து சென்ற வேதனையில்
ஒரு தாய் சொன்னது) நேற்று என் மகள் தன் கொங்கைக்
கண்களும், முத்து மாலையும் நன்றாக அழுந்துமாறு
என்னை உடல் முழுவதும் இறுகக் கட்டித் தழுவிக்
கொண்ட அடையாளத்தை அப்போது நான் சிறிதும் அறியாமல்
போனேனே! என் சித்திரப்பாவை போன்ற மகள், அப்பொழுது
செய்த இந்த அடையாளங்கள், கலைமான் கூட்டம் புலிக்குப்
பயந்து வெருவி ஓடுகின்ற காட்டு வழியிலே, அவள் மறுநாள்
செல்லப் போவதைக் குறித்துதான் போலும்.

No comments:

Post a Comment