Tuesday, October 23, 2012

நாலடியார் - (398/400)

நாலடியார் - (398/400)


கடக்கருங் கானத்துக், காளைபின், நாளை
நடக்கவும் வல்லையோ? என்றி; -- கடர்ந்தொடீஇ !
பெற்றான் ஒருவன் பெருங்குதிரை அந்நிலையே
கற்றான் அக்துரும் ஆறு?


பொருள்:- 'ஒளிர்கின்ற வளையல்களை அணிந்தவளே!
கடந்து போவதற்கு அரிய காட்டில், காளை போன்ற
தலைவன் பின்னால், நாளை கடந்து செல்லும் வல்லமை
உண்டோ? என்று என்னை நோக்கி கூறினாய்! பெரிய குதிரையை
பெற்ற ஒருவன், அதனைப் பெற்ற அதே வேலையில், அதில்
ஏறி நடத்தும் முறையையும் அறிந்தவன் அல்லவே? (என்று
தலைவி தனது தோழியை பார்த்து சொன்னாள்)

No comments:

Post a Comment