Friday, October 19, 2012

நாலடியார் (395/ 400)

நாலடியார் (395/ 400)


கண்கயல் என்னும் கருத்தினால், காதலி
பின்சென்றது அம்ம, சிறுசிரல்! - பின்சென்றும்,
ஊக்கி எழுந்தும், எறிகல்லா ஒண்புருவம்
கோட்டிய வில்வாக்கு அறிந்து!


பொருள்:- ஏன் காதலுக்குரிய மனைவியின் விழிகளைக்
கயல் மீன்கள் என்று எண்ணி, அதனைக் கொத்தித் தின்னும்
பொருட்டு, மீன் கொத்திப் பறவை அவள் பின்னால்
சென்றது. அவ்வாறு பின் சென்றும், முயற்ச்சி செய்தும்,
அவளது ஒளியுடைய புருவமானது வளைந்த வில்லின்
வலைவுபோல் இருந்ததைக் கண்டு அஞ்சி, ஒடி விட்டது.

No comments:

Post a Comment