Saturday, October 20, 2012

28-வது நட்சத்திரம் அபிஜித்


28-வது நட்சத்திரம் அபிஜித் ......  

நன்றி சேஷாத்ரிநாத சாஸ்த்ரிகள் ....சக்தி விகடன் 

உத்திராட நட்சத்திரத்திற்கும் - திருவோணத்துக்கும் இடையே ஒரு நட்சத்திரம் உண்டு. தன பெயர் அபிஜித். 28வது நட்சத்திரம். இதன் தேவதை பிரஜாபதி என்று விளக்குகிறது வேதம்(உபரிஷ்டாதஷாடானாம்
ச்ரோணாயை).


நட்சத்திர வேள்வி என்ற தொகுப்பில் அபிஜித் நட்சத்திர வேள்வியும் அடங்கும் ஜோதிடத்தில் இந்த நட்சத்திரம் இடம்பெறவில்லை. விண்வெளியில் எண்ணிலடங்கா நட்சத்திரம் இருந்தாலும், 27 நட்சத்திரங்கள் மட்டுமே
பிறப்புடன் ஓட்டிக்கொண்டு பிறந்தவனின் குணாதிசியங்களை வெளிப்படுத்த இயலும் என்பதை அறிந்து பரிந்துரைத்தது ஜோதிடம். காலத்தை அளவிடும் கருவிகளில் நட்சத்திரமும் அடங்கும். சூரியனை வைத்து சௌரமானம்; சந்திரனை வைத்து சாந்திர மானம்; உதயாச்தமனத்தை வைத்து ஸாவனமானம். அதுபோன்று நட்சத்திரன் ஒரு சுற்றி வைத்து நாக்ஷத்திரமானம் என்று கால கணனம் உண்டு (சௌரசாந்திரஸாவன
நக்ஷத்திரமானை: அனுமிதே....)'பத்து மாதம் சுமது பெற்று' - என்ற வழக்குச் சொல் நட்சத்திர அளவில் 10 மாதத்தைச் சொல்லும் 27 x 10 = 270 நாட்கள், பத்து மாதம் ஆகும். மற்ற அளவுகளில்.....குழந்தை 10 மாதங்கள் கருவறையில் இருக்காது


அயனம் = 6 மாதம்
ரிது = 2 மாதம்


ஒரு மாதம் = 30 நாள், பக்கம் = 15 நாள், வாசரம் = ஒரு நாள், க்ஷணம்= 2 நாழிகை.


இவை அனைத்தையும் அதாவது 6 (மா) + 1 (மா) + 15 நாட்கள் (பக்கம்), ஒரு நாள் (வாஸரம்), க்ஷணம் - 2 நாழிகை இவற்றை கூட்டினால் வரும்.... 9 மாதங்கள் .. 16 நாட்கள் - 2 நாழிகை கால அளவுதான் சராசரி கர்ப்பவாசம் என்று பிரசவ காலத்தை, அதாவது குழந்தை வெளிவரும் நேரத்தை ஜோதிடம் துல்லியமாக எடுத்துச் சொல்லும் (அயனக்ஷண...)( நட்சத்திரத்தின் கால அளவு பிறப்பை உறுதி செய்கிறது) மாதவிடாயின் கால அளவு 27 நாட்கள். அதுவும் நட்சத்திர கால அளவை வைத்து வரும். 'ஊனமாசிகம்' நட்சத்திரமானத்தில்
மாத நிர்ணயம் செய்கிறது. 27 நாட்களில் மாதம் நிறைவுற்றதாக வைத்து செயல்படும் பிறந்தநாளை நட்சத்திர அளவில் நிர்ணயம் செய்வோம் கால மாற்றத்தில் தேதியை ஏற்றாலும் பிறந்தநாளை நட்சத்திரத்தி வைத்து கொண்டாடும் வழக்கம் தற்போதும் உண்டு.
.
நமது உடலில் பஞ்சபூதங்களின் கலவை. அதில் ஆகாசத்தின் பங்கை நிறைவு செய்வதில், பிரகங்களுடன் நட்சத்திரத்துக்கும் பங்குண்டு . கிரகங்கள் நகர்ந்து செல்ல நட்சத்திரங்கள் உதவுகின்றன. கிரக பாதாசாரம் என்ற சொல்லின் 'பாத' என்ற பகுதி, நட்சத்திர பாதத்தைக் குறிக்கும். கிரகங்கள் ஊர்ந்து செல்லும் சாலையாக(பாதையாக) நட்சத்திரங்கள் செயல்படுகின்றன அமிருத யோகம், சித்த யோகம், மரண யோகம் போன்றவற்றில் நட்சத்திர பக்குதான் யோகத்தை வரையறுக்கிறது. தினப் பொருத்தம் என்பது நட்சத்திரப் பொருத்தம்தான். நல்ல காரியங்களை துவக்க நட்சத்திர பலம் வேண்டும் என்கிறது காலவிதானம்.
(தாராபலம் சந்திரபலம் ததைவ).


சந்திரா பூர்ணிமா, வைகாசி விசாகம், ஆடிப்பூரம், ஆவணி அவிட்டம்,கார்த்திகை தீபம், மாசி மகம், பங்குனி உத்திரம் போன்றவை நட்சத்திரத்தின் பெருமைக்குச் சான்று. திருவோனவிரதம் கார்த்திகை விரதம், ஆருத்ரா தரிசனம் போன்ற விரதங்களும் நட்சத்திரத்துக்கு முன்னுரிமை அளிக்கும். கேரளத்தில் அரச பரம்பரையை சுட்டிக்காட்ட நட்சத்திரத்தைப் பயன்படுத்துவர். ஆயில்யம் திருநாள், மூலம் திருநாள் என்று அரசறி குறிப்பிடுவர். ஆழ்வார்கள் திருநட்சத்திரம், நாயன்மார் திருநட்சத்திரம் என்று தெய்வ அடியார்களையும் குறிப்பிடுவது உண்டு.


இறை வடிவங்களை ஆராதிப்பதிலும் நட்சத்திரத்துக்கு பங்கு உண்டு. புனர்வசுவில் ராமர் ஆராதனை, திருவோணத்தில் விஷ்ணு , திருவாதிரையில் ஈசன் உத்திரத்தில் சாஸ்தா, மூலத்தில் கலைமகள், கிருத்திகையில் கந்தன்... இப்படி பட்டியல் நீளும். துருவன் அருந்ததி, அகஸ்தியர், சப்த ரிஷிகள் ஆகியோர் நட்சத்திர வடிவில் விண்வெளியில் வீற்றிப்பார்கள் , அழிவற்றவர்களாத் திகழ நட்சத்திர வடிவை (ஜோதிர் வடிவம்) அவர்கள் தேர்ந்தெடுத்தனர். விண்வெளியில் மிளிர்வதால் உலக மக்கள் அனைவரும் தரிசிக்கும் வாய்ப்பு உண்டு.
அந்தந்த நாளில் தென்படும் நட்சத்திரங்களை விண்வெளியில் சந்திரனின் அருகில் சந்திக்கலாம். விசாகா நட்சத்திரம் சந்திரனைப் பின்தொடர்ந்து நகருகிறது என்பார் காளிதாசன்
(யதிவிசாகே சசாங்கலோகாமனுவர்த்ததே). நாக ஆராதனைக்கு தனிப்பெருமை உண்டு. நாட்டில் இருக்கும் நாக வடிவங்களுக்கு ஆயில்ய நட்சத்திரத்தில் விசேஷ பூஜை நிகழும். ஆலய பிரதிஷ்டா தினத்தை நட்சத்திரம் நிர்ணயிக்கும். பூரம் பிறந்த புருஷன், மகம் பிறந்த நங்கை.இப்படி நட்சத்திர இணைப்பில் மிளிரும் தகுதியை ஆணிலும் பெண்ணிலும் கண்டு கழிப்பதுண்டு.


படைப்பை ஏற்ற பரம்பொருள் ஹஸ்த நட்சத்திரத்தை தனது கைகளாகவும் சித்திரையை சிரசாகவும், சுவாதியை இதயமாகவும், விசாகத்தை இரண்டு துடைகலாகவும், அனுஷத்தை பாதங்களாகவும் தன உடலோடு இணைத்துக் கொந்து செயல்படுகிறார் என்கிறது வேதம். (ஹ ஸ் த ஏ வா ஸ் ய ஹ ஸ் த சித்ரா
சிர ......) மஹாளையபக்ஷத்தில் 'மஹா பரணி' சிறப்புப் பெற்றது. தென் புலத்தாரை வழிபட பரணி நட்சத்திரம் சிறந்தது என்று சாஸ்திரம் சொல்லும். எம பயத்தைப் போக்க பரணி தீபமும் பயன்படும். நட்சத்திரங்களை வழிபட்டால் அவர்கள் இருக்கும் ச்வர்கத்தை அடைவான்; நட்சத்திர வடிவில் விளங்கிக் கொண்டிருப்பான் என்கிறது வேதம் (அமும்ஸ்லோகம் நக்ஷதே )


கிரஹண காலத்தில் சூரியனையும் சந்திரனையும் ராகு தீண்டினாலும், அதோடு இணைந்த நட்சத்திரங்களுக்கும் பாதிப்பு இருப்பதால், அந்த அந்த நட்சத்தில் பிறந்தவர்களை ஆராதனையில் ஈடுபடச் செய்யும் சாஸ்திரம்.


மேல்நோக்கு , கீழ் நோக்கு, பக்க நோக்கு என்று பார்வையில் பாகுபாடு உண்டு. எமன்மையானது, கடினமானது, ஸ்திரமானது, சரமானது என்ற தன்மைகளும் உண்டு. அத்துடன் கிருத்திகை முதல் விசாகம் வரையிலானவை தேவ நட்சத்திரங்கள். அனுஷம் முதல் பரணி வரை - யம நட்சத்திரங்கள் என்ற பாகுபாடும் வேதம் சொல்லும். (கிருத்திகா: ப்ரதமம், விசாகே உத்தமம் தானி தேவநக்ஷத்ராணி, அனுராதா: ப்ரதமம்
அபபரனீருத்தமம் தானியம நக்ஷத்ராணி). கிருத்திகை முதல் நக்ஷத்திரமாகவும் பரணியை கடைசி
நட்சத்திரமாகவும் குறிப்பிடும் வேதம் (அக்னே:கிருத்திகா...)பிற்பாடு வந்த ஜோதிட வல்லுனர்கள் பலன்
சொல்லுவதற்கு பாங்காக அச்வினியை முதல் நட்சத்திரமாகவும் ரேவதியை கடைசியாகவும் குறிப்பிட்டனர்.
ஆனால், கிரகனாயகன் சூரியன் தசையை கிருத்திகையுடன் இணைத்து வேதக் கருத்துக்கு இயைந்து செயல் பட்டனர்.....
.....................தொடரும்