நாலடியார் - (394/400)
செல்சுடர் நோக்கிச் சிதரரிக்கண் கொண்டநீர்
மெல்விரல் ஊழ்தெரியா, விம்மித், தன் --மெல்விரலின்
நாள்வைத்து, நம்குற்றம் எண்ணுங்கோல், அந்தோ! தன்
தோள்வைத்து அனைமேற் கிடந்து!
பொருள்:- மேர்கடலை நோக்கிச் செல்கின்ற மாலை நேரத்து
சூரியனைப் பார்த்து, சிதறிய செவ்வரிகளை உடைய கண்களிலே
நிறைந்துள்ள கண்ணீரைத் தன மெல்லிய விரல்களால் நாட்களைக்
கணக்கிட்டுக் கொண்டு, படுக்கையிலேயே தன தோள்களையே
தலையணையாகக் கொண்டு படுத்து நம் குற்றங்களையே
எண்ணிக் கொண்டு உறங்காமல் இருப்பாளோ எம் தலைவி?
ஐயோ !
No comments:
Post a Comment