Saturday, October 13, 2012

நாலடியார் -- (388/400)



நாலடியார் -- (388/400)


கொடியவை கூறாதி; பாண நீ கூறின்,
அடிபைய இட்டொதுங்கிக் சென்று -- துடியின்
இடக்கண் அனையம்யாம், ஊரற்கு; அதனால்
வலக்கண் அனையார்க்கு உரை.

பொருள்:- பாணனே! கொடிய சொற்களை கூறாதே! ஏனென்றால்,
நான் என் தலைவனுக்கு(கணவனுக்கு) உடுக்கையின் இடது
பக்கத்தைப் போல் இப்பொழுது பயன்படாது இருகின்றோம். அதனால்,
நீ அத்தகைய சொற்களைச் சொல்வதென்றால், மெதுவாக இந்த
இடத்தை விட்டுப் பொய், உடுக்கையின் வலைப்பக்கத்தைப் போல்
இப்போதெல்லாம் அவருக்கு பயன்பட்டுக் கொண்டிருக்கும் விலை
மகளீருக்கு சொல்வாயாக! (மனைவியைப் பிரிந்து பரத்தையிடம்
சென்ற கணவன் மீண்டும் பாணன் மூலம் மனைவியின் இசைவைப்
பெற முயல, அந்தப் பாணனுக்கு அவள் கூறியது இது)

No comments:

Post a Comment