Thursday, October 11, 2012
நாலடியார் -- (387/400)
நாலடியார் -- (387/400)
கருங்கொள்ளும், செங்கொள்ளும், தூணிப் பதக்கென்று
ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரான்; - ஒருக்கொவ்வா
நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
என்னையும் தோய வரும்!
பொருள்:- மருத நிலத்து ஊரில் உள்ள ஒருவன், தாழ்ந்த கரிய கொள்ளையும்,, உயர்ந்த செங்கொள்ளையும், அவற்றின் தன்மை அறிந்து வேறு, வேறாகப் பிரித்து அறியாமல், ஒரே விலையில் வாங்கிக் கொண்டானாம். அதுபோல், குல மகளையும், விலை மகளையும் வித்தியாசம் பார்க்காமல், கொஞ்சமும் ஒத்திராத, அழகிய நெற்றியை உடைய, விலை மகளை அனுபவித்த மலை போன்ற மார்பை உடைய என்கணவன், நீராடாமலேயே என்னையும் சேர வருகின்றான்; என்னே இது!(என்று மனைவி ஒருத்தி கூறினால்)
Labels:
நாலடியார்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment