நாலடியார் - (386/400)
உள்ளத்து உணர்வுடையான் ஓதிய நூலாற்றல்,
வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள்; -- தெள்ளிய
ஆண்மகன் கையில் அயில்வாள்; அனைத்தரோ
நானுடயாள் பெற்ற நலம்.
பொருள்;- வள்ளல் தன்மை கொன்ட ஒருவனிடத்தில்
இருக்கும் பெருமையுடைய மிகுந்த செல்வமானது,
உள்ளத்திலே நல்ல அறிவினை உடையவன் கற்று
அறிந்த நூற்பொருள் போலப் பலருக்கும் பயனுடயதாக
இருக்கும். அதுபோல் நாணம் உடைய குலமகள் பெற்று
இருக்கும் நல்ல அழகானது, மிகச்சிறந்த வீரனாகிய ஆண்
மகனது கையில் உள்ள கூர்மையான வாளைப் போன்று
பலரும் புகழும் படியாக பெருமையுடன் விளங்கும்.
No comments:
Post a Comment