Saturday, October 6, 2012

பிணிகளை நீக்கும் வீரட்டானேஸ்வரர் - 2

சிவனின் வீரம்  வெளிப்பட்ட அட்ட வீரட்ட தலங்கள்  - 2

பிணிகளை நீக்கும் வீரட்டானேஸ்வரர்






சிவபெருமான் வீரத் திருவிளையாடல் புரிந்த 8 தலங்களில் திருவதிகை
வீரட்டேசுவரர்  தலமும் ஒன்றாகும் . இத்தலம்  பண்ருட்டியில் இருந்து
கடலூர் செல்லும் பாதையில்  சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்தலத்தில்  இறைவனாக வீரட்டானேசுவரரும் , இறைவியாக திரிபுர சுந்தரியும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள் புரிகிறார் லிங்கமேனி 16 பட்டைகளுடன் கூடியது.

நாவுக்கரசரின் சகோதரி திலகவதியார் ஈசனுக்கு தொண்டு புரிந்த தலம் .
திருநாவுக்கரசரை ஆட் கொண்ட சூலை நோய் தீர்த்த தலம் என்பன போன்ற பல்வேறு சிறப்புகள் இத்தலத்திற்கு உண்டு



தலவரலாறு:-

வித்யுன்மாலி, தாருகாட்சன், கமலாட்சன் என்ற 3 அசுரர்கள் பொன், வெள்ளி
இரும்பு ஆகியவற்றால் 3 கோட்டைகளை கட்டி வாழ்ந்து வந்தனர். மேலும்
இவர்கள் மூவரும் தங்களை எவராலும் வெல்லவோ, கொல்லவோ முடியாது
என்ற வரத்தை பிரம்மாவிடம்  இருந்து பெற்றனர். இதனால் இவர்கள் மூவரும்
மற்றவர்களை துன்புறுத்தி வந்தனர். அவர்களால் தொல்லை அடைந்தவர்கள்
ஈசனிடம் முறையிட்டனர்.

அவர்களின் துயரங்களை போக்க முடிவு செய்த சிவபெருமான் , அதன்படி
ஈசன், பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு
வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் உருமாற
செய்தார். மற்ற தேவர்களெல்லாம் படை வீரர்களாகவும் வரச் செய்தார்.
அதோடு மேரு மலையை  வில்லாகவும், வாசுகி என்னும் பாம்பை நாணாகவும், திருமாலை அம்பாகவும், அம்பின் நுனியில் அக்னியை வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார்.

தேர் பாகங்களாக மாறிய ஒவ்வொரு உறுப்புகளும் தன்னால் தான் அசுரர்கள்
அழியபோகிறார்கள் என கர்வம் கொண்டன, இதை அறிந்த இறைவன் என்
பங்கை நினைக்க யாருமில்லையா? நானின்றி இப்படையில் எதுவும்
பயனின்றிப்  போவதை உணரவில்லையா? என நினைத்து சிரித்தார்.
அவ்வளவுதான் உலகமே நடுங்குமடியாக தீப்பிழம்பு ஏற்ப்பட்டது. இதில்
அசுரர்கள் மூவரும் எரிந்து சாம்பல் ஆயினர்.

தங்கள் உதவி இல்லாமலேயே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து
தேவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் , அசுரர்கள்
ஆணவத்தை அடக்கினார் ஈசன். பின்பு 3 அசுரர்களையும் மன்னித்து இருவரை
தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழாமுழக்குபவனாகவும்
ஆக்கிக் கொண்டார். இந்த சம்பவம் நடந்த இடம் தன திருவதிகை.

வயிற்று வலியை நீக்கிய இறைவன்:-

திருவதிகை  நகரின் மேற்க்கே சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் திருவாழூர்
என்ற ஊரில் பிறந்த திருநாவுக்கராசர்  சமண   மதத்தில் மிகவும் தீவிரமாக இருந்தார். அவரது சகோதரி திலகவதியார் சைவ சமயத்தில் இருந்து வீரட்டானேசுவரருக்கு தொண்டு செய்து இறைவன் புகழ் பாடி வந்தார்.

தமிழுக்கு சாகா வரம் பெற்று திகழும் தேவார பதிகங்களை தர இறைவன் திரு
உள்ளம் கொண்டார். நாவுக்கரசரை ஆட்கொள்ள நினைத்தார் சமண மதத்தில்
பற்றுதலாக இருந்த அவரை சூலை நோயால் பாதிக்கப்படச் செய்தார்.
சமண சமயத்தை சேர்ந்தவர்கள் அவரது வயிற்று வலியை நீக்க எவ்வளவோ
மருந்து மாத்திரை கொடுத்து முயன்றனர்  ,

இறைவனின்   திருவிளையாடல்களுக்கு முன்னே அவை எம்மாத்திரம்?

வலி முன்னை விட அதிகமானது, நாவுக்கரசர் திருவதிகை அடைந்து திலகவதியாரின் காலில் விழுந்து தமது நோயை போக்கும்படி கூற, திலகவதியாரும் இது இறைவனின் சோதனை என்றறிந்து, சகோதரரை
வீரட்டானேசுவரர்  சன்னதிக்கு அழைத்து சென்று 'ஓம் நமச்சிவாய்!' என
ஐந்தெழுத்தை பய பக்தியுடன் ஓதி  தம்பிக்கு திருநீறு அளித்தார்.

நாவுக்கரசரும்  அந்த திருநீறை  உடலில் பூசிக்கொண்டு, வாயில் போட்டுக்கொண்டார் என்னே அதிசயம் ! வயிற்று  வலி பனிபோல் நீங்கியது.
உடனே நாவுக்கரசர் 'அம்மையே ! அப்பா! ஒப்பிலாமணியே!' என
வீரட்டானேசுவரரை நெஞ்சுருக பாடி வணங்கி 'கூற்றாயினவாறு
விலக்ககலிர்' என்றும் திருப்பதிகம் பாடினார்.

தேவார பாடல் பெற்ற முதல் கோவில்:-

முதன் முதலாக மலர்ந்த தேவார பாடலை கேட்டு மகிழ்ந்த சிவபெருமான்,
'இனி நாவுக்கரசு  என உனது பெயர் விளங்கட்டும்' என்று பட்டம் கொடுத்தார்
அதுமுதல் திருநாவுக்கரசர் சிவத்தையே உயிர் மூச்சாக  கொண்டு உழவார பணி செய்து வந்தார்.

நோய்கள் தீர்க்கும் தலம்:-

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மன நிம்மதி கிடைக்கும், உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும், வயிற்று வலி, சத்ரு உபாதைகள்  ஆகியவற்றுக்கு இக்கோவிலுக்கு வந்து ஈசனை வணங்கி திருநீறு, சூலைத்தீர்த்தமும் உட்கொண்டால் பிணி நீங்கி நலம் கிடைக்கும்.,  குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு  அபிஷேகம் செய்து அந்தப் பாலை உட்கொண்டால்  விரைவில் மகப்பேறு கிட்டும்.

இந்த இறைவனை வழிபடுவோருக்கு ஆணவம் கன்மம், மாயை ஆகிய
மும்மலங்களும் நீங்கும்  திருமணம் ஆகாவதவரல் இங்கு வந்து பிரார்த்தனை
செய்தால் விரைவில் திருமணம் கைகூடும். இத்தலத்தில் குனிந்துதான்
வீபூதி பூச வேண்டும் .

தல அமைவிடம்:-

இத்தலம் கடலூரில்  இருந்து பண்ருட்டி செல்லும் வழித்தடத்தில் சுமார்
2 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. விழுப்புரம் - கடலூர் ரெயில்
பாதையில் பண்ருட்டி ரெயில் நிலையத்தில்  இறங்கியும் இத்தலத்திற்கு செல்லலாம்

சிறப்புத் தகவல்கள் :-  சுந்தரருக்கு திருவடி தீட்சை

தேவார பாடல் ஆசிரியர்களில் ஒருவரான சுந்தரர் சிதம்பர தலத்தை
தரிசிக்க சென்று கொண்டு யுந்தார் , அவ்வமயம் அவர் நாவுக்கரசர் வழிபட்டு
அருள் பெற்ற தலமான திருவதிகை வந்தார், உத்தமர் வழிபட்டு உயர்ந்த
தலமான இத்தலத்தை  காலால் மிதிக்க கூடது என்று பயந்து ஊருக்கு
வெளியே இருந்தபடியே திருத்தலத்தை வணங்கி அருகில் உள்ள சித்தவடம்
எனும் மடத்தில் தங்கினார்.

சுந்தரரும் ஆவருடன் வந்த அடியார்களும் தூங்கிக் கொண்டிருந்தனர் , அப்போது முதிய அந்தணர் ஒருவர், சுந்தரர் தலை மீது அவர் கால்கள் படும்படி
வைத்து தூகுவதை போல் இருந்தார். இதனால் சுந்தரரின் தூக்கம் கலைந்தது
உடனே சுந்தரர் முதியவரை நோக்கி உங்கள் கால்களை என் தலை மீது
வைக்கிறீர்களே எனக் கேட்டார்

அந்த முதியவரும் முதுமை காரணமாக தான் இப்படி தெரியாமல் நடந்து
விட்டது என்றார், அதை உண்மை என்று நம்பி சுந்தரரும் வேறு பக்கம்
தலை வைத்து உறங்கலானார். அந்த முதியவரும் மறு படியும்  தன காலால்
சுந்தரர் தலை மீது படும்படி வைத்து உறங்கினார் . சுந்தரரும் மறுபடியும்
என்னை காலால் மிதித்துக் கொண்டு இருக்கிறாயே நீ யார் என கேட்டார்

அப்போது சிவபெருமான் என்னை அறியவில்லையா நீ? என்று கேட்டு மறைந்தார்.  அப்போது தான் சுந்தரருக்கு உண்மை புரிந்தது. 'திருவதிகை
கோவில் உரையும் சிவபெருமான் முதியவராக வந்து என் தலைமேல் தன்
திருவடிகளை வைத்தும் அதை அறியாமல் போனேனே என வருந்தினார்.


















No comments:

Post a Comment