Tuesday, September 11, 2012

பத்திய சாதம் பறந்தோடும் நோய்கள்

பத்திய சமையல்  - பத்திய சாதம்


பத்திய சாதம் சாப்பிடலாம் வாருங்கள்

நம்ம உடம்பை நாமதான் நல்ல கவனிச்சுக்கணும் , அத தவற விட்டுட்டு
மருத்துவரிடம்  போய்  காண்பித்து , டாக்டர் எனக்கு அங்க வலி இங்க வலி
அப்டின்னு சொன்னா அவர் 100 காரணம் சொல்லி , 1000 ரூபாய் வாங்குவார்
உடம்பு வலி போனாலும் , பணம் போனது மனசு வலிக்கும் , அதுக்கு யார்
மருந்து குடுப்பாங்க.

அதுனாலதான் வாரத்தில் 1 முறை , அல்லது 15 நாட்களுக்கு
ஒருமுறை வேணாங்க மாசத்தில் ஒருமுறை இந்த சாப்பாட்ட
சாப்டுங்க , மருத்துவர் உங்க வீடு தேடி வந்து உங்கள பார்த்துட்டு
போவார் , என்னங்க ஆளையே காணும்னு

அப்டி என்னங்க  பிரமாதமான சாப்பாடு

சுண்டைக்காய் வற்றல்
மணத்தக்காளி வன்றல்
வேப்பம்பூ
மோர் மிளகாய்



இது நாலும்  நான்கு வேதங்கள் மாதிரி , நான்கு திசைகள் மாதிரி 

இத நல்லா பொன் வறுவலா வறுத்து வச்சுக்கோங்க 


சுட சுட சாதம் , இந்த நாலும்  கொஞ்சம் , கொஞ்சம் போட்டுண்டு 
கொஞ்சமா நெய் விட்டு பிசைஞ்சு  சாப்டுங்க , (நெய் சேர்க்காம 
சாப்ட்டா ரொம்ப நல்லது)

இதுக்கப்புறம் ஜீரகம் மிளகு ரசம் சாதம் தான் சாப்பிடனும் 
பருப்பு ரசம் வேண்டாம் ஒருநாளைக்கு .

இப்ப உங்க உடம்புல 6 வகையான இயற்க்கை பொருட்கள் 
சேர்ந்திருக்கு இவை அவளவு நல்லது. 

உடம்புல இருக்கிற எந்த விதமான உபாதையையும் இது போக்கிவிடும் 

என்ன நான் சொன்னது புரிஞ்சுதா , ஒருகாலத்ல  இதெல்லாம் 
அம்மா வத்தலா மொட்டை மாடில உலத்தி எடுத்து டப்பால 
போட்டு வச்சிருப்பா. அனா இப்ப மொட்ட மாடிய பாக்கறதே 
ரொம்ப கஷ்டம் , அதுனால கடைல விக்கறத வாங்கி வறுத்து 
சாப்டுங்க .


பத்திய சாதம் பறந்தோடும் நோய்கள் 


No comments:

Post a Comment