Sunday, September 9, 2012

வெண்டைக்காய் கறி (கரமது)

வெண்டைக்காய் கறி (கரமது) (Ladies Finger - Fry) By:- Savithri Vasan


இது ஒரு சுலபமான , விரைவாக செய்யக்கூடிய பொறியல்
வகை



வெண்டைக்காய் சிறிது சிறிதாக  நறுக்கி கொள்ளவும்
(காய் நறுக்குவதற்கு முன் சுத்தம் செய்ய  வேண்டும் )




வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு , கடுகு
உளுத்தம் பருப்பு தாளித்து , நறுக்கிய காயை போட்டு
உப்பு சேர்த்து , காரப்பொடி சேர்த்து  கொஞ்சம் தண்ணீர்
தெளித்து (*தட்டு போட்டு மூடி வைக்கவும்)

5 நிமிடம் கழித்து தட்டை எடுத்துவிட்டு நன்றாக
கிளறி இறக்கவும் .

வெண்டைக்காய் கரமது தயார் , சுவைத்து பாருங்கள்



* தட்டை போட்டு மூடி வைப்பதால் , காய் ஆவியில் 
  வெந்து , அதிகம் சூடு ஏறாமல் , பசுமை நிறம் மாறாது 
  இருக்கும்.

 கொஞ்சம் கருவேப்பிலை சேர்க்கவும் , சிலர் வேகவைத்த
பருப்பு சேர்ப்பார்கள் , இவை அவரவர் விருப்பம் போல்

வெண்டைக்காய் உடையாமல் இருக்க ஒரு ஸ்பூன் தயிர்
சேர்க்கலாம்.

தளிர் விரல்களை நறுக்க கைகள் அஞ்சுமோ?  , விருந்தை படைக்க
நெஞ்சம் கெஞ்சுமே !!!!





No comments:

Post a Comment