Tuesday, September 11, 2012

பொடிமாஸ்

உருளைக்கிழங்கு பொடிமாஸ்


பொடிமாஸ் வகைகள் சில இங்கே நாம் பார்க்கப் போகின்றோம்
இவைகளும் கறி  வகைகளே  ஆனா காரம் சேர்க்காதவை


உருளைக்கிழங்கு மற்றும் வாழையாய் பொடிமாஸ்
மிகவும் பிரபலமான  வகைகள் , பெரும்பாலும்
கல்யாணங்களில் செய்து அசத்துவார்கள் .


உருளைக்கிழங்கு நறுக்காமல் அப்படியே வேகவைத்து
கொள்ளவும்.

தோல் உரித்து கைகளால் மசித்து உதிரித்து கொள்ளவும்

வாணலியில் கொஞ்சம் எண்ணை வைத்து கடுகு
உளுத்தம் பருப்பு , கடலைப்பருப்பு தாளித்து , தோல் உரித்த
உருளைக்கிழங்கு ,மஞ்சள் பொடி , உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்

10 நிமிடம் கழித்து கீழே இறக்கி வைத்து கொஞ்சம் எலுமிச்சை
சாறு சேர்க்கவும் , கருவேப்பிலை சேர்க்கவும்





சுவைக்க , சுவைக்க , இன்பம்

பொடிசுங்க விரும்பி சாப்பிடுவது , பொடிமாஸ் , அதுனால தாங்க
இதுக்கு அந்த பேர் "மாஸ் சப்போர்ட் ஆப் பொடிசுகள்"


No comments:

Post a Comment