Saturday, September 22, 2012

மலையாள மகாலட்சுமி!

மலையாள மகாலட்சுமி!




ஆலப்புழா மாவட்டத்தில் பள்ளிபுரம் என்ற இடத்தில் உள்ளது மலையாள மகாலட்சுமி கோயில். மகாலட்சுமிக்கு தனிக்கோயில் உள்ளது இங்கு மட்டும்தான். 750 வருடங்கள் பழமையான கோயில் இது. இங்கு மகாலட்சுமிக்கு வாகனம் முதலை. நுழைவு வாயிலில் ஒன்பது கிரகங்களுக்கும் அதிதேவதைகள் ஒரே இடத்தில் உள்ளனர்.



இத்திருத்தலத்தில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, சேத்திரபாலகர் ஆகியோருக்கு சந்நிதி உள்ளது.

மூலஸ்தானத்தில் மகாலட்சுமி நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள். முன் கைகளில் நெல்லும், கிளியும், பின் கைகளில் சங்கு சக்கரமும் ஏந்தியிருக்கிறாள். மகாலட்சுமி கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள் தருகிறாள். அவருக்கு எதிர்புறம் சூரிய நாராயணர் இருக்கிறார். இந்த மகாலட்சுமி தமிழகத்தில் காஞ்சிபுரத்திலிருந்து முதலை வாகனத்தில் வந்ததாக ஐதீகம். எனவே மகாலட்சுமிக்கு முதலை வாகனமாக உள்ளது.

No comments:

Post a Comment