Thursday, September 13, 2012

கோவை மக்களின் செல்லப்பிள்ளை


கோவை மக்களின் செல்லப்பிள்ளை




கோவை மக்களின் இஷ்ட தெய்வமான, 500 ஆண்டுகள் பழைமையான விநாயகர் ஈச்சனாரியில் உள்ள விக்னேஸ்வரர். கோவை } பேரூரில் அமைந்துள்ள பட்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்காக இந்த விநாயகர் சிலையைக் கொண்டு சென்றனர். அப்போது ஈச்சனாரி பகுதியில் வண்டியின் அச்சு முறிந்தது. எனவே விநாயகரை அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர்.

எடுத்த காரியம் தடங்கலின்றி வெற்றி பெறுவதற்கு இந்த விக்னேஸ்வரரை வழிபடுகின்றனர். இங்கு ஒவ்வொரு நாளும் அன்றைய நட்சத்திரப்படி விநாயகருக்கு அலங்காரம் செய்வது சிறப்பு. கோவை பொள்ளாச்சி சாலையில் 9 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கோயில்.

No comments:

Post a Comment