பருப்பு உசிலி
பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
உசிலிகள் ஒருவிதம் ஒவ்வொன்றும் அதேவிதம்
அமாங்க உசிலி அடிப்படை தயாரிப்பு ஒன்றுதான்
ஆனா அதுல சேர்க்கற காய்கள் தான் வேற வேற
அந்த காயை சார்ந்த சுவையும் வேறுதான்
சரி இப்ப என்ன என்ன காய் போட்டு செய்யலாம்
அப்டின்னு முதல்ல பார்க்கலாம்
இதுல முதல் ரேங்க் வந்து வாழைப்பூக்குதான்
வாழைப்பூ உசிலி,
கொத்தவரங்காய் உசிலி
பீன்ஸ் உசிலி
அவரைக்காய் உசிலி
புடலங்காய் உசிலி
பூசணிக்காய் உசிலி
வேணும்னா வெண்டைக்காய்ல கூட பண்ணலாம்
சரி உசிலி செய்ய என்ன என்ன தேவை
மேலே சொன்ன ஏதாவது ஒரு காய்
பொதுவாக கீழ்கண்டவை
துவரம் பருப்பு 1 ஆழாக்கு
பச்சை மிளகாய் 5
வத்தல் மிளகாய் 10
பெருங்காயம்
உப்பு தேவைக்கேற்ப
மேலே சொன்ன ஏதாவது ஒரு காயை தேர்ந்தெடுத்து
அதை வேகவைத்துக் கொள்ளவும்
நாம் வாழைப்பூ எடுத்துக்கொள்வோம்
முதலில் , பச்சை மிளகாய், வெத்த மிளகாய்
பெருங்காயம் , உப்பு சேர்த்து மிசியில் அரைக்கவும்
பிறகு ஊறவைத்த பருப்பை அதனுடன் சேர்த்து
ஓன்று இரண்டாக கெட்டியாக அரைத்து எடுக்கவும்
அடுப்பில் வாணலியில் கொஞ்சம் எண்ணை விட்டு
கடுகு தாளித்து , அரைத்த விழுதை போட்டு நன்றாக
உசிலிக்கவும் (இதற்க்கு பெயர்தான் உசிலி), பிறகு
வேகவைத்த காயை போட்டு நன்றாக கிளறவும்
அப்பொழுதுதான் அது அந்த காயின் பெயரி கொண்ட
உசிலியாக உருவெடுக்கின்றது.
(சிலர் மைக்ரோ ஓவனில் வைத்து செய்வார்கள்
அது அவரவர் விருப்பம். அனால் சுவை மாறும்)
இப்பொழுது சுவையான சூடான பருப்பு உசிலி தயார்
சாப்பிடுங்க , சாப்பிடுங்க, சாப்டுகிட்டே இருங்க , சந்தோஷமா
**சற்றுமுன் கிடைத்த தகவல் :-
ஒரு வாசகர் கருத்தாக, சின்ன வெங்காயம் , கொத்தமல்லி
தழையிலும் உசிலி செய்தால் நன்றாக இருக்கும் என்று.
என்ன நாமும் செய்து பார்த்து சுவைப்போமா
....................நன்றி சரஸ்வதி ஜெயராமன் அவர்களே உங்கள் கருத்து
அனைவருடனும் பகிர்ந்து கொள்ளப்பட்டது

No comments:
Post a Comment