Thursday, September 13, 2012

மணக்கோலத்தில்


                                                 மணக்கோலத்தில் மகாகணபதி


               
உப்பூர் வெயிலுகந்த விநாயகரை வழிபட்ட பிறகு சீதையை மீட்க ராமர் இலங்கை சென்றதாக தலபுராணம். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடனை அருகே, உப்பூர் கிராமத்தில் அருள்கிறார் வெயிலுகந்த விநாயகர். தட்சிணாயன காலங்களில் சூரிய ஒளி விநாயகரின் தெற்குப் பகுதியிலும், உத்தராயண காலங்களில் சூரிய ஒளி விநாயகரின் வடக்குப் பகுதியிலும் படுவது அதிசயம்.

தமிழ்நாட்டில் முதன்முதலாக விநாயகருக்கு சித்தி, புத்தி தேவியருடன் திருமணம் இங்கேதான் நடக்கிறது. சதுர்த்திக்கு முதல் நாள் நடக்கும் இந்த வைபவத்தில் பங்கேற்று விநாயகரை தரிசித்தால் திருமணத் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் இவரை வணங்கி செல்வது சிறப்பு.


உப்பூர் வெயிலுகந்த விநாயகரை , உளமார வணங்கி 
திருமண தடை அகற்றுவோம் 

No comments:

Post a Comment