Sunday, September 30, 2012

பழ மொழிகள்

பழ மொழிகள் 


சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா.

சர்க்கரை என்றால் தித்திக்குமா?

சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.

சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?

சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.

சாட்சிக்காரன் காலில் விழுவதிலும் சண்டைக்காரன் காலில் விழலாம்.

சாட்டை இல்லாப் பம்பரம் ஆட்டிவைக்க வல்லவன்.

சாண் ஏற முழம் சறுக்கிறது.

சாத்திரம் பாராத வீடு சமுத்திரம், பார்த்த வீடு தரித்தரம்.

சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார்.

சாது மிரண்டால் காடு கொள்ளாது.

சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது.

சுக துக்கம் சுழல் சக்கரம்.

சுட்ட சட்டி அறியுமா சுவை.

சுட்ட மண்ணும் பச்சை மண்ணும் ஒட்டுமா?

சுடர் விளக்காயினும் தூண்டுகோல் ஒன்று வேண்டும்.

சுண்டைக்காய் காற்பணம் சுமை கூலி முக்காற்பணம்.

சுத்த வீரனுக்கு உயிர் துரும்பு.

சுத்தம் சோறு போடும் எச்சில் இரக்க வைக்கும்.

சும்மா இருக்கிற தம்பிரானுக்கு இரண்டு பட்டை.

சும்மா கிடக்கிற சங்கை ஊதிக்கெடுத்தான் ஆண்டி.

சும்மா வந்த மாட்டை பல்லைப் பிடித்தப் பாராதே.

சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?

சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.

சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.

சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.

செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்?

செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?

செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.

செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?

செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.

செயவன திருந்தச் செய்.

செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?



தொடரும் பழமொழி ........................தொடர்து வாருங்கள் 

No comments:

Post a Comment