Wednesday, September 5, 2012

பிடி குழக்கட்டை (உருண்டை குழக்கட்டை)

பிடி குழக்கட்டை (உருண்டை குழக்கட்டை):- By.Savithri Vasan

உருப்பிடாதவன் உண்டக்கட்டி வாங்கி விளக்கில்லாத
கோவிலில் விண்டு விண்டு , சாப்பிடுவானாம்

இது பழமொழி


அரிசி , துவரம் பருப்பு, மிளகு , சீரகம்

தேவையான அளவு

அரிசி 1 ஆழாக்கு
துவரம் பருப்பு  2 தே .கரண்டி
மிளகு, ஜீரகம் , 1  தே .கரண்டி
தேங்காய் துருவல் 1 கப்
பச்சை மிளகாய் 2 (சிறு சிறு துண்டாக வெட்டவும்)
கடுகு, உளுத்தம் பருப்ப் ,மிளகாய் வற்றல் தாளிக்க
கருவேப்பிலை

அரிசி, பருப்பு, மிளகு & ஜீரகம் மிசில
ஒன்னு ரெண்டா பொடி பண்ணிக்கணும்

அடி கெட்டியான பாத்திரம் அடுப்பில் ஏற்றி
2 முட்டை எண்ணை (தேங்காய் என்னை கூட உபயோகிக்கலாம் )
கடுகு உளுத்தம்பருப்பு , பச்சை மிளகாய், மிளகாய் வற்றல்
தாளித்து, தேங்காய் துருவல் சேர்த்து கருவேப்பிலை போட்டு
தாளித்து,  பிறகு 3 டம்பளர் தண்ணீர் சேர்த்து நன்றாக
கொதிக்க விடவும்

தண்ணீர் தலைத்ததும் , உடைத்த மாவை போட்டு
10 நிமிடம் நன்றாக கிளறவும். பிறகு அடுப்பில் இருந்து
கீழே இறக்கி வைக்கவும்.

சூடு ஆறியதும்  (கை பொறுக்கும் சூட்டில்) கொழக்கட்டைகளாக
பிடித்து , இட்லி செய்யும் தட்டில் வைத்து , குக்கரில் ஆவியில்
வைத்து வேக வைக்கவும்.



இவ்ளவு  தாங்க  , பிடி கொழக்கட்டை ரெடி , சும்மா
ஒரு பிடி பிடிங்க.

தொட்டுக்கவா? நல்ல சட்னி செஞ்சு சாப்அழ,டுங்க , என்ன அதுக்கும்
நான் தான் ரெசிபி சொல்லனுமா ???

சொல்லறேன் !!!!!

சட்னி செய்முறை :-

தேங்கா துருவல், காய்ந்த மிளகாய் 5 , கொஞ்சம் உப்பு
சேர்த்து மிசில அரைங்க, கெட்டிய  அரைத்துக்கொள்ளவும்
கடுகு, உளுத்தம்பருப்பு , மிளகாய் வற்றல் தாளித்து
சாப்டுங்க , சாப்டும்போது என்னை மறக்காதீங்க ..........!!!!!!










No comments:

Post a Comment