Thursday, September 6, 2012

திருமணத் தடை நீங்கும்!




திருமணத் தடை நீங்கும்!




தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் கரையில் அமைந்துள்ளது சிவ, வைணவத் தலமான கபிஸ்தலம். இவ்வூருக்கு அருகே உள்ள கீழ கபிஸ்தலத்தில் அருள்புரிகிறார் காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர்.

பழைமையான இத்திருக்கோயிலின் உள்ளே ஏகாம்பரேஸ்வரர், காமாட்சி அம்மன், இரட்டை விநாயகர், காசிவிஸ்வநாதர், சனீஸ்வரர், பைரவர் ஆகிய சந்நிதிகளும், கோயில் வெளிப்பிராகாரத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், வள்ளி - தெய்வானை சமேத முருகன், சண்டிகேஸ்வரர், நவகிரகங்கள், விஷ்ணு துர்க்கை ஆகிய மூர்த்தங்களுக்கான சந்நிதிகளும் அமைந்துள்ளன. உற்ஸவ தினங்கள் அனைத்தும் கொண்டாடப்படுகின்றன. காமாட்சி அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்து வழிபட்டால் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடந்தேறும். 

தற்போது இக்கோயிலில் ராஜகோபுரம் அமைப்பது உள்ளிட்ட பல திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. விரைவில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 மேலும் தகவலுக்கு : 98436 52401/94437 01223.

அமைவிடம்: கும்பகோணம் - திருவையாறு சாலையில் கீழகபிஸ்தலம் பின்னைமரம் பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப்பில் இறங்கி வடக்கே செல்ல வேண்டும்.


இருமனம் காணும் திருமணத்தடை இறையருள் பெற்று இனிதே விலக .....இங்கே வாருங்கள் 

No comments:

Post a Comment