சாய்ந்த நிலையில் சிவலிங்கம்
திருநெல்வேலி மாநகரிலிருந்து சுமார்
25 கிலோமீட்டர் தொலைவில் தாமிரபரணி
நதிக்கரையில் அமையப்பெற்றுள்ள திருத்தலம்
திருபுடைமருதூர். இங்கு அமையபெற்றுள்ள
கோமதி அம்பாள் சமேத நாறும்பூநாதர் கோவில்.
இந்த கோவிலில் காட்சி தரும் மூலவர் லிங்கம்
சற்றே இடது பக்கம் சாய்ந்த நிலையில் உள்ளது
சிறப்பம்சம்.
இதற்க்கு காரணம் தெரியுமா?
ஒருமுறை சிறந்த சிவபக்தரான கருவூர் சித்தர்
இத்தலத்தில் அருள்புரியும் சிவனை தரிசிக்க
வந்தார். அவர் தாமிரபரணியின் வடகரைக்கு
வந்த போது ஆற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு
ஏற்ப்பட்டது. இதனால் ஆற்றை கடக்க முடியாத
அவர், அக்கரையில் இருந்துகொண்டே தென்கரையில்
மலர்கள் பூத்துக்குலுங்கிய மருத மலர்கள் நிறைந்த
வனத்தின் மையத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை
நோக்கி 'நாறும் பூவின் நடுவே நிற்பவனே நினை
தரிசிக்க எனக்கு அருள்புரிவாயோ' என மனமுருகி
வேண்டி பாடினர்.
அவரது பாடலில் மயங்கிய சிவன், தனது இடது செவியில்
கை வைத்து ஒருபுறம் சாய்வாக திரும்பி, ரசித்து
கேட்டார். பின்னர் தன்னை நினைத்து ஆற்றைக்
கடக்கும்படி கருவூர் சித்தனிடம் சிவன் கூற, அதன்படி
ஆற்றைக் கடந்த கருவூரார் அவரை வணங்கி அருள்பெற்றார்
இவாறு கருவூர் சித்தரின் பாடலை செவி சாய்த்து
கேட்டதால், இங்கு சிவலிங்கம் இடப்புறம் சாய்வாக
திரும்பிய நிலையில் அருள் பாலிக்கிறார்.

No comments:
Post a Comment