Tuesday, September 25, 2012

திருப்பதி பிரமோற்சவ விழா

திருப்பதி பிரமோற்சவ விழா இன்று நிறைவு!





திருப்பதி, வெங்கடேச பெருமாள் கோவிலில், ஒன்பது நாட்களாக நடந்து வந்த, ஆண்டு பிரமோற்சவ விழா, இன்று காலை, தெப்ப திருக்குளத்தில், சக்கரஸ்நான திருமஞ்சன சேவையுடன் நிறைவடைகிறது.பிரமோற்சவ விழாவின், எட்டாம் நாளான நேற்று, ரத உற்சவம் நடந்தது. 

ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக, மலையப்ப சுவாமி ரத உற்சவ சேவையில், திருமலையின் மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் நிறைவு நாளான, இன்று நடைபெறும், சக்கரஸ்நான வைபவ நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment