Thursday, September 6, 2012

நாகதோஷம் நீங்கும்!

நாகதோஷம் நீங்கும்!





திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது நெய்வேலி கிராமம். இங்கே முட்புதர்கள் வளர்ந்த வனாந்திர பகுதியில், ஒரு முதிர்ந்த கல்லால மரத்தின் கீழ், சிதைவுற்ற ஒரு கருவறையில் புதையுண்டு, ருத்ரபாகம் மட்டும் வெளியே தெரியும் வகையில் ஒரு சிவலிங்கம் தென்பட்டது. அதைக் கண்டு பரவசமடைந்த மக்கள் ஓலைக்குடில் அமைத்து அந்த சிவலிங்கத்தை வழிபட்டு வந்தனர். இறைவனின் திருநாமம் அக்னீஸ்வரர் என்பதை ஆன்மிகப் பெரியோரின் மூலம் அறிந்தனர்.

தற்போது அக்னீஸ்வரருக்கு புதிய ஆலயம் எழுப்பும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அக்னீஸ்வரர், லலிதாம்பிகை, வனதுர்கை, முருகன் சந்நிதிகள், மஹாமண்டபம், நுழைவாயில் கோபுரம் ஆகியவற்றின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இக்கோயிலின் தீர்த்தமான அக்னி தீர்த்தத்தில் நீராடி அக்னீஸ்வரரை வணங்கினால் தீராத நோயும் தீரும் என்பது நம்பிக்கை. நாகதோஷ நிவர்த்தி தலமாகவும், புத்திர பாக்கியம் அருளும் தலமாகவும் இது விளங்குகிறது.

மேலும் தகவலுக்கு: 99403 98648.


அக்னீஸ்வரர் ஆலயத்திருப்பணி  ஆண்மிகப்பணி 

No comments:

Post a Comment