Thursday, September 6, 2012

காவடி சொல்லும் தத்துவம்



காவடி சொல்லும் தத்துவம் 





தைப்பூசம் அன்று முருக பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன்
செலுத்துவார்கள். இந்த வழக்கம் உருவாக காரணமானவன் ஓர் அசுரன்

அகத்தியர் தந்த சிவகிரி, சந்த்ரகிரி என்ற மலைகளை காவடி போல்
கட்டி தூக்கி வந்தான் இடும்பன் என்ற அசுரன். அவனை பழனி திருத்தலத்தில்
தடுத்து நிறுத்தி, அந்த மலைகளோடு அவனையும் ஆட்கொண்டார் முருகப்பெருமான்.

'மலை போன்ற துன்பங்கள் உனக்கு வாரலாம் ஆனால், அதை சுமப்பது உன் வேலையல்ல. அதை என்னிடம் ஒப்படைத்துவிட்டு, நீ உன் பாதையில் செல்' என்பதே காவடி சொல்லும் தத்துவம்.

காவடியின் தத்துவம் , கந்தன் தந்த காவியம் 

No comments:

Post a Comment