Monday, September 3, 2012

ரவா இட்லி

ரவா இட்லி : By:- Savithri Vasan

'வா' என்றது 'வரும்' ரவை சார்ந்த பலகாரங்கள் 
உப்புமா, இட்லி, தோசை, கஞ்சி இப்படி பல பல 
எளிதில் சுவையுடன் எதுவாக செய்ய 

இப்ப நாம ரவா இட்லி எப்டி செய்யலாம்னு பார்க்கலாம்

தேவையானவை :-

கடுகு, ................... தாளிக்க 
உப்பு, .................... தேவைக்கேற்ப 
கடலைப்பருப்பு ...1 டீஸ்பூன் 
உளுத்தம்பருப்பு,..2 டீஸ்பூன் 
தயிர், .....................1 கப்
ரவை .................... 1 ஆழாக்கு 
கருவேப்பிலை , (கொத்தமல்லி- தேவைப்பட்டால்  

வாணலியில் எண்ணை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு
கடலைப்பருப்பு, தாளித்து , ரவையை இதனுடன் சேர்த்து
கலந்து கொள்ளவும் , பிறகு தயிர்,உப்பு சேர்த்து , நன்றாக
பிசைந்து சுமார் முப்பத்து நிமிடம் அப்படியே வைத்து
விடவும் . கருவேப்பிலை சேர்க்கவும் .


பிறகு இந்த கலவையை நாம் சாதரணமாக
இட்லி செய்வதுபோல் செய்து சூடாக
பரிமாறவும் .


(சிலர் கரட் சேர்ப்பார்கள் , அது அவரவர் விருப்பம் )

என்னங்க ரொம்ப சுலபமா இல்ல , இதுதாங்க ரவையின் 
சிறப்பு  

No comments:

Post a Comment