Tuesday, September 4, 2012

இறையருள் பெறுவோம் - அட்ட வீர தலங்கள்

சிவனின் வீரம் வெளிப்பட்ட அட்ட வீர தலங்கள்


தமிழ்க்கடவுள் முருகனுக்கு ஆறுபடை வீடுகள்
இருப்பதை போல் அவரது தந்தை சிவபெருமான்
திருவிளையாடல் புரிந்த இடங்கள், அருள் புரிந்த
இடங்கள், ஆற்றலை வெளிப்படுத்தி வீரச் செயல்கள்
புரிந்த இடங்கள் சில உள்ளன அவை சிவபெருமானின்
எட்டு படை வீடுகளாக கருதப்படும் பெருமை உடையவை.


இந்த எட்டு தலங்கள் அட்ட வீரட்ட தளங்கள் என்றும்
எண்பெரும் வீரட்ட தளங்கள் என்றும் போற்றி வணங்கப்
படுகின்றன. அட்ட வீரட்ட தலங்களில் 4 தலங்கள்
தஞ்சை மாவட்டத்திலும், 2 தலங்கள் தென்னாற்காடு
மாவட்டத்திலும் உள்ளன.


இந்த தலங்கள் பற்றிய விவரம் பழைய பாடல் ஒன்றில்
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


'பூமன் சிரங்கண்டி அந்தகன் கோவல், புரமதிகை
மாமன் பறியல் சலந்தரன் விற்குடி மாவழுவூர்
காமன் குறுக்கை யமன் கடவூர் இந்தக் காசினியில்
தேமன்னு கொன்றையும் திங்களும் சூடி தான் சேவகமே'


சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட எட்டு தலங்களும்
அவற்றிற்கான காரணங்களும் இந்த பாடலில்
குறிப்பிடப்பட்டுள்ளது. அவை வருமாறு.


1) திருக்கண்டியூர்:- பிரம்மன் சிரத்தைக் கொய்த தலம்


2) திருக்கோவலூர் :- அந்தகாசுரனை வதம் செய்த தலம்


3) திருவதிகை:- முப்புராதிகளான தாருகாட்ஷன், கமலாட்ஷன், மற்றும்
   வித்யுன்மாலி ஆகிய அவுணர்களை எரித்த தலம்.


4)திருபறியலூர்:- தக்கன் யாகம் தகர்த்து அவனது தலையை கொய்த தலம்


5)திருவிற்கொடி:- சலந்தாசுரனை சக்கராயுதத்தால் தடிந்த தலம்


6)திருவழுவூர்:- யானையை உரிபோர்த்த தலம்.


7)திருக்குறுக்கை:- மன்மதனை எரித்த தலம்


8)திருக்கடவூர்:- மார்க்கண்டேயருக்காக யமனை  உதைத்த  தலம் 



No comments:

Post a Comment