Monday, September 10, 2012

குழிப்பணியாரம் செய்வது எப்படி ?


அனைவருக்கும் இனிய காலை வணக்கங்கள்
இன்னைக்கு காலைலேயே உங்களுக்கு ஒரு
ஒரு நல்ல சிற்றுண்டி விருந்து


குழிப்பணியாரம் செய்வது எப்படி ?


அதுதான் தெரியுமே , குப்பி குப்பியா இருக்குமே
அதுக்கு என்ன இப்ப.........

யாரு! யாரோ?? அங்க கேட்டாங்களே !!!


எனக்கும் தெரியும்ங்க ஆனா இன்னொருதடவை
அதை நான் எல்லாருக்கும் சொன்னா எனக்கு
நல்லா மனப்பாடம் ஆகும் , தெரியாதவங்க
தெரிஞ்சுப்பாங்க, அதுக்குதான் சொல்லறேன்


சரி!!! சரி!! அப்டின்னா சொல்லுங்க......

சாதாரண தோசை மாவு தயாரிப்பது போல்
அரிசி உளுந்து தனித்தனியாக ஊறவைத்து
அரைச்சு வைங்க...





கொஞ்சம் வெங்காயம் பொடி பொடியா நறுக்கி
போடுங்க



கடுகு தாளித்து, வெங்காயம் வதக்கி கொட்டுங்க ,
(வேணும்னா கடலை பருப்பும் சேர்த்துக்குங்க)
நான் போடலை

அப்புறம் பணியார தவா அடுப்பில வச்சு
முதல்ல எல்லா குழியிலயும் கொஞ்சம் கொஞ்சமா
எண்ணை விடுங்க ,


பிறகு அதுல மாவ விடுங்க


பணியாரத்த மெல்ல திருப்பி போடுங்க 


திரும்பி பார்த்தா பணியாரம் பணிவோடு

உங்க தட்ல இருக்கும் , அதை கனிவோடு
குடுங்க உங்க விருபமானவங்களுக்கு
(நான் என் மனைவிக்கு குடுத்தேன்)


நீங்க?????????


பணிவு வேண்டுமா , இன்றே சாப்பிடுங்க பணியாரம் 




No comments:

Post a Comment