ஆனந்தம் தரும் ஸ்ரீஆனந்தீஸ்வரர்!
அகத்தியர் தீர்த்த யாத்திரையாக தென்னகம் வந்தபோது பல சிவாலயங்களுக்கும் சென்று வழிபட்டார். அவ்வகையில் அகத்தியர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்ட தலங்களில் ஒன்றுதான் பாக்கம் கிராமம். சென்னை, திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூருக்கு அருகில் உள்ளது இந்தத் தலம். சித்தேரிகரையில் அமைந்துள்ளது ஸ்ரீஆனந்தீஸ்வரர் ஆலயம்.
இத்திருக்கோயில் இயற்கை சூழக் காணப்படுகிறது. ராஜேந்திர சோழனா
ல் கி.பி. 1022ஆம் ஆண்டு திருப்பணி செய்யப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இவ்வாலயத்தின் தல விருட்சமாக கல்லாலமரம் உள்ளது. குரு தட்சிணாமூர்த்தி இங்கு காட்சி தருகிறார்.
இவ்வாலயம் காலப்போக்கில் சிதிலமடைந்தது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தீஸ்வரருக்கு கூரையால் குடில் அமைத்து வழிபாடு செய்யப்பட்டது. பிறகு சில ஆண்டுகள் கழித்து சிறு கோயில் கட்டப்பட்டது.
தற்போது கருங்கல்லினால் கோயில் எழுப்பப்பட்டு, மூன்று நிலை ராஜகோபுரம் அமைக்கும் பணி நடந்துகொண்டிருக்கிறது. பத்து கால் மண்டபமும் எழுப்பப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட ஆனந்தீஸ்வரரை வழிபட்டால் நமக்கும் ஆனந்தம் கிடைக்குமன்றோ!
No comments:
Post a Comment