திருமலை திருப்பதியில் கருட சேவை
திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், ஆண்டு பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான 22ம் தேதி இரவு, 9 முதல், 11 மணி வரை, கருட வாகனச் சேவை நடைபெறுகிறது. காலை, மோகினி அவதாரக் கோலத்தில், திருமலையின் நான்கு மாட வீதிகளிலும், உற்சவர் வலம் வருவார். இக்காட்சியைக் காண, லட்சக் கணக்கானோர் திருமலையில் குவிந்துள்ளனர்.
திருமலை தேவஸ்தான உண்டியலில், கடந்த, 18ம் தேதி, 1.96 கோடி ரூபாயும்; 19ம் தேதி, 2.6 கோடி ரூபாயும், பக்தர்கள் அளித்த காணிக்கை மூலம் வசூலாகி உள்ளதாக, தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, மூன்று தங்கக் கிரீடங்கள், உண்டியலிலிருந்து எடுக்கப்பட்டன. சென்னையைச் சேர்ந்த, பெயர் வெளியிட விரும்பாத நகை வியாபாரி ஒருவர், மலையப்ப சுவாமிக்கு அணிவிக்க, மூன்று தங்கக் கிரீடங்களை தயார் செய்து, திருமலைக்கு கொண்டு வந்து, தேவஸ்தான அதிகாரிகளிடம் வழங்க முயற்சி செய்துள்ளார்.
நிர்வாகத்தின் முன் அனுமதியின்றி தயார் செய்துள்ளதால், கிரீடங்களை பெற்றுக்கொள்ள அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதையடுத்து, மூன்று கிரீடங்களையும் அவர், கோவில் உண்டியலில் செலுத்தியிருப்பது தெரிய வந்துள்ளது. கிரீடங்களின் மதிப்பை கணக்கிடவில்லை என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
லட்சத்தில் பக்தர்கள் கூட்டம் , கோடிகளில் காணிக்கை , மலயப்பருக்கு
மலைப்பேன் நமக்கு
No comments:
Post a Comment