தினசரி தியானம்
இறந்த காலமும் எதிர்காலமும்
காலத்துக்கும் காலனாயுள்ள கடவுளே, யான் யாண்டும் உன்னை என் இதயத்தில் காண்பேனாக.
இறந்தகாலம் இனி வருவதில்லை. கனவு போன்று அது மறைந்து போய்விட்டது. அதைப்பற்றிய எண்ணமோ நிகழ்காலத்துக் குரியது. எதிர்காலம் வெறும் மனோ கற்பனை. அக்கற்பனையும் நிகழ்காலத்தில் தான் இருக்கிறது. இடையறா நிகழ்காலமே யாண்டும் உளது. ஆத்ம சன்னிதானம் என்பது இதுவே.
அன்று முதல் இன்றளவும் அறியாப்பருவமதில்
என்றும் பொதுவாயிருந்த நிராமயன்காண்.
-பட்டினத்தார்
No comments:
Post a Comment