Thursday, September 27, 2012

நாலடியார் -- (373/400)

நாலடியார் - (373/400)


அங்கண் விசும்பின் அமரர் தொழப்படும்
செங்கண்மால் ஆயினும் ஆகமன்! -- தம்மைக்
கொடுப்பதொன்று இல்லாரைக் கொய்தளிர் அன்னார்
விடுப்பார் தம்கையால் தொழுது


பொருள்:- அழகிய, இடம் அகன்ற வானுலகத்தில் உள்ள
தேவர்களால் வணங்கப்படுகின்ற, சிவந்த கண்கள் உடைய
திருமாலே ஆனாலும் ஆகட்டும்! கொடுக்கும்படியாக
தன்னிடம் பொருள் எதுவும் இல்லாதவரை, கொய்யத்தக்க
தளிர் போன்ற மேனியை உடைய விலை மாதர்கள், அவரைப்
பார்த்து தம் கையால் கும்பிட்டு, வெளியே அனுப்பிவிடுவார்கள்.
அவருடன் கூடி தர முன்வரமாட்டார்கள். அதாவது
விலை மகளிர் தம்மிடம் வருபவரிடம் உள்ள பொருளைத்
தவிர வேறு தகுதியை ஆராய்ந்து பார்க்க மாட்டார்கள்.

No comments:

Post a Comment