தினசரி தியானம்
காந்த ஊசி
காந்தத்தைச் சேரும் இரும்பு தானே காந்தமாவது போன்று கருணாகரனே, உன்னில் நான் கலப்பேனாக.
கப்பலானது காற்றால் அலைக்கழிக்கப்படும் பொழுதும் அக்கப்பலில் இருக்கும் காந்தவூசி வட திசையையே காட்டி நிற்கிறது. வாழ்விலே மனிதனுக்கு வரும் இன்னல்களுக்கிடையில் அவனுடைய மனம் என்னும் காந்தவூசி கடவுள் என்னும் குறியையே நாடியிருக்க வேண்டும்.
காந்தம் இரும்பைக் கவர்ந்திழுத்தா லென்ன அருள்
வேந்தன் எமை இழுத்து மேவுவனோ பைங்கிளியே.
-தாயுமானவர்
உன்னில் மயங்கி உன்னையே நான் அடைய உன்னருள் வேண்டும் உத்தமா போற்றி போற்றி
அருமையான வரிகள்
ReplyDeleteநன்றி அன்பரே...
அன்புடன்
சீனு@ஹைதராபாத்.