Thursday, September 13, 2012

கலைநயம் நிறைந்த ஆலயம்!



                         கலைநயம் நிறைந்த ஆலயம்!





கோவை நகரிலிருந்து மேற்கே 17 கி.மீ. தொலைவில், தொண்டாமுத்தூர் அருகே உள்ளது பரமேஸ்வரம்பாளையம். இங்கு இயற்கை எழில் சூழ்ந்த மலையின் உச்சியில் பெருமாள் கோயிலும், அந்த மலையின் அடிவாரத்தில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் திருக்கோயிலும் அமைந்துள்ளன. 

ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது இக்கோயில். விஜயநகர பேரரசு காலத்தில் கட்டிய பெரிய மதிற் சுவரும், தெப்பக் குளமும் கலைநயத்துடன் அமைந்துள்ளன. காலப்போக்கில் இக்கோயில் சிதிலமடைந்தது. 

கடந்த 27.1.2012 அன்று திருப்பணி தொடங்கப்பட்டது. மூலவர் சந்நிதியுடன் சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், தன்வந்திரி, லட்சுமி, ஹயக்ரீவர் சந்நிதிகள் மற்றும் அன்னதான மண்டபம் ஆகியவை தற்போது புதுப்பிக்கப்படுகின்றன. 

மேலும் தகவலுக்கு: 99523 40750
.

No comments:

Post a Comment